5 ஆயிரம் கன அடியில் இருந்த நீர்வரத்து தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. மேலும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழக எல்லையோர காவிரி ஆற்று பகுதிகளிலும் பெய்த மழையின் அளவு குறைந்தது.
இதனால் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகம் குறைந்தது.
இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 700 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருந்தது. தமிழக காவிரி நீர் படிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியில் இருந்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
