ஆடை குறித்த கேள்விக்கு தொகுப்பாளினியின் விளக்கம்..!

அம்பி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் தகாத முறையில் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரகுபதி. புதியதாக சில படங்களில் நடித்து வருகிறார். குறும்படங்களில் நடிக்கும் இவர் தற்போதைக்கு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ரோபோ சங்கர் நாயகனாக நடித்துள்ள படம் அம்பி. இந்த படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கஞ்சா கருப்பு , இமான் அண்ணாச்சி , ரமேஷ் கண்ணா மோகன் வைத்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டி மீடியா சார்பாக பிரசாந்தி பிரான்சிஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். அம்பி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பத்திரிகையாளர் ஒருவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் ஆடை குறித்து தகாத முறையில் கேள்வி கேட்டது சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய ரோபோ சங்கர் தான் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி பத்திரிகையாளரளை நிறைய தண்ணீர் குடிக்கும்படி ஆலோசனை கூறினார். அப்பொது பத்திரிகையாளர் ஒருவர் வெயிலுக்கு நிறைய தண்ணீர் குடிக்க எங்களிடம் சொன்னீர்கள் அதே மாதிரி நீங்கள் அணிந்திருக்கும் உடையும் வெயிலுக்கான ஒரு உடை என்று நான் நினைக்கிறேன். அப்படிதானா ” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ‘நம்ம இங்க என்ன டாபிக் பேசிட்டு இருக்கோம். என் உடையைப் பற்றிய கேள்வி இங்கு சம்பந்தமில்லாதது ‘ என பதிலளித்தார். இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரில ” என அவர் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த பத்திரிகையாளரை பலர் விமர்சித்து வருகிறார்கள். அந்த நிருபரும் இதற்கு விளக்கமளிக்க இந்த விஷயத்தில் நடிகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியதாவது “இந்தக் காலத்திலும் பல ஆண்கள் சமூகத்தில் தங்களது ஆண் திமிரையும் ஈகோவையும் வைத்துக்கொண்டு சுற்றுவதைப் பார்க்க கவலையாக இருக்கிறது. இதெல்லாம் நன்றாக அறிந்த ஒரு நிருபரிடம் இருந்து இப்படியான செயலைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. உணர்வே இல்லாத நபர்களிடமிருந்து சில ஆண்டுகளாக எனக்கு தேவையில்லாத பிரச்னைகள் வருகின்றன. அந்தமாதிரியான நேரங்களில் எனக்கு கோபம், அல்லது மேடை நாகரிகம் கருதி அமைதியாக இருப்பேன். அன்றைய நாளில் நான் அமைதியாக இருந்தேன், ஆனால் பிறகு மிகவும் கவலையாக இருந்தது. சிறுது அழுதேன். பின்னர் என்னை நானே தேற்றிக்கொண்டு எனது வேலையை முடித்தேன். நான் என்னை ஒரு பிரபலமாகவே கருதியதில்லை. இந்த சினிமா, ஊடகத்துறை எல்லாம் எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. 2018-இல் செய்தி வாசிப்பாளராக சேர்ந்த எனக்கு சினிமா, ஊடகம், மனிதர்களின் ஈகோ குறிதெல்லாம் தெரியாது. தற்போது நான் இருக்கும் இடத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன்.

படங்களில் துணைக்கதாபாத்திரங்களிலும் குறும் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறேன். ஊடகத் துறையில் பெண்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன். அழகைவிட அவர்கள் செயல் முக்கியமெனக் கருதுகிறேன். நான் எப்போதுமே பிறருக்கு கடின உழைப்பு, கருணை, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.வளரும் நடிகையாக படப்பிடிப்பில் பாராட்டு பெறுவது எனக்கு முக்கியமானது. இருந்தாலும் எனக்கும் பொருளாதார ரீதியாக பிரச்னைகள் இருக்கின்றன. அதனால்தான் இப்படியான எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகளில் வேலை செய்கிறேன். என்னுடைய துரதிஷ்டம் என்னுடைய கோபத்தை சோதிக்கவே பலரும் வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் நான் வலுவாகிக்கொண்டே செல்கிறேன். மக்கள் என்னைப் பார்த்து ‘அவங்க வீட்டுப் பொண்ணு’ எனக் கூறுவது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு இன்னும் சிறிது நேரம் அளியுங்கள் நான் உங்களைப் பெருமைப்பட வைக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தண்ணீர் குடியுங்கள். உடல்நலத்துடன் இருங்கள்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!