உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்..!

பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் 116 வயதில் காலமானார்.
உலகின் மிக வயதான நபராக வாழ்ந்து வந்த பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானார். இனா கனபரோ லூகாஸ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மே 27, 1908-ல் பிறந்த லூகாஸ் 116 வயது 326 நாட்களில் இறந்துவிட்டதாக கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்பவர்களின் வாழ்க்கையை கண்காணிக்கும் தளமான லாங்கிவிகுவெஸ்ட் தரவுத்தளம் தெரிவித்துள்ளது.

உங்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன என்று அவரிடம் பலரும் கேட்கும்போது, அதற்கு காரணம் இறைவனே எனக் கூறுவாராம். கடந்த 2018 ஆம் ஆண்டு லூகாஸ் தனது 110வது பிறந்தநாளின்போது ​​மறைந்த போப் பிரான்சிஸிடமிருந்து ஆசிப் பெற்றார். 1934 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரியாக மாறிய இவர் ஆசிரியராக பணியாற்றினார்.

லூகாஸ் மறைவின் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த எதெல் கேட்டர்ஹாம் இப்போது உலகில் வாழும் மிக வயதான நபராக மாறியுள்ளார். கனபரோவுக்கு முன்பு, உலகின் மிக வயதான நபர் என்ற பட்டம் ஜப்பானியப் பெண்ணான டோமிகோ இடூகாவுக்குச் சொந்தமானது, அவர் ஜனவரி 2025 இல் இறந்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!