வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களை சுப்ரீம்கோர்ட் இன்று (ஏப்ரல் 16) விசாரிக்கிறது.
பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் காங்கிரஸ், ஓவைசி கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து, தி.மு.க., சார்பில் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆ.ராசா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 16) வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மசோதாக்களை சுப்ரீம்கோர்ட் விசாரிக்கிறது. மனுவில், ”வக்ப் திருத்த சட்டம் முஸ்லிம்களின் உரிமைகளை மீறுகிறது. பாகுபாடு காட்டுகிறது” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு மதியம் 2 மணிக்கு மனுக்களை விசாரிக்கத் தொடங்குவார்கள்.