அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை ( www.arasubus.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 8 மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கும்பகோணம் 756, சேலம் 486, சென்னை 364, நெல்லையில் 362 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.