வரலாற்றில் இன்று (மார்ச் 11)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.
1649 – புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது.
1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.
1812 – சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் 3-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.
1888 – ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
1897 – மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
1902 – இலங்கையில் காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.[2]
1905 – இலங்கையில் காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.[2]
1917 – முதலாம் உலகப் போர்: பக்தாத் நகரம் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.
1918 – உருசியாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.
1931 – சோவியத் ஒன்றியத்தில் “வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு” என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் கடன்-குத்தகை ஒப்பந்தம் சட்டத்தை அமுல்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பு போர்த் தளவாடங்கள் நேச நாடுகளுக்கு கடனாக அனுப்பப்பட்டன.
1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளங்கள் மீது மிகப்பெரிதான கமிக்காஸ் தாக்குதலை ஆரம்பித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானின் பொம்மை அரசு வியட்நாம் இராச்சியம் பாவோ தாய் தலைமையில் அமைக்கப்பட்டது.
1946 – நாட்சிகளின் அவுசுவிட்சு வதமிகாமின் முதலாம் கட்டலை அதிகாரி ருடோல்ஃப் ஒசு பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்கு கரோலைனாவில் பலர் காயமடைந்தனர்.
1977 – வாசிங்டனில் அனாஃபி முசுலிம்களால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 130 பேரும் மூன்று இசுலாமிய நாடுகளின் கூட்டு முயற்சியை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.
1978 – ஒன்பது பாலத்தீனத் தீவிரவாதிகள் இசுரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 37 பொதுமக்களைக் கொன்றனர்.
1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.
1990 – லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
1998 – திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
1999 – இன்ஃபோசிஸ், இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.
2004 – எசுப்பானியா தலைநகர் மாத்ரிதில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
2007 – தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4பி என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5ஏ என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
2009 – செருமனியில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
2010 – செபஸ்டியான் பினேரா சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் பிச்சிலெமு பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட நிலநடுக்கம் பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.
1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.
2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.
2012 – ஆப்கானித்தான், காந்தாரம் அருகே அமெரிக்க இராணுவ வீரன் 16 பொதுமக்களைப் படுகொலை செய்தான்.

பிறப்புகள்

378 – முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) (இ. 417)
1811 – உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1877)
1898 – சித்பவானந்தர், இராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி (இ. 1985)
1912 – என். ஜி. ராமசாமி, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1943)
1913 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் (இ. 1987)
1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (இ. 1976)
1927 – வி. சாந்தா, இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணர் (இ. 2021)
1931 – ரூப்பர்ட் மர்டாக், ஆத்திரேலிய-அமெரிக்கத் தொழிலதிபர்
1936 – ஹெரால்டு சூர் ஹாசென், நோபல் பரிசு பெற்ற செருமானிய நச்சுயிரியலாளர்
1952 – டக்ளஸ் ஆடம்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 2001)
1985 – அஜந்த மென்டிஸ், இலங்கைத் துடுப்பாளர்

இறப்புகள்

1863 – ஜேம்சு ஓற்றம், ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1803)
1955 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய உயிரியலாளர் (பி. 1881)
1967 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (பி. 1896)
1971 – பைலோ பார்ன்சுவர்த், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1906)
1979 – ஆர். அனந்த கிருஷ்ணர், ஆந்திர கருநாடக இசைக் கலைஞர் (பி. 1893)
1997 – திக்குறிசி சுகுமாரன், மலையாள இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் (பி. 1916)
2002 – ருடால்ப் ஹெல், செருமானியக் கண்டுபிடிப்பாளர் (பி. 1901)
2012 – த. ஆனந்தமயில், ஈழத்து எழுத்தாளர் (பி. 1947)
2013 – சு. சபாரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1930)
2013 – ஸ்ரீபாத பினாகபாணி, இந்திய கருநாடக இசைப் பாடகர், மருத்துவர் (பி. 1913)
2013 – வே. தில்லைநாயகம், நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. 1925)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (லித்துவேனியா, சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!