சர்வதேச துருவக் கரடி தினம் இன்று. துருவக் கரடிகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேசத் தன்னார்வ அமைப்பு பிப்ரவரி 27ஐ சர்வதேச துருவக் கரடிகள் நாளாகக் கடைபிடித்துவருகிறது. புவிவெப்பமய மாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்பவை துருவக் கரடிகள். உறைபனி சூழ்ந்த பகுதியில் வாழ்வதாலேயே அவற்றைப் பனிக் கரடிகள் என்றும் அழைப்பதுண்டு.புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள கடல் பனி பேரளவு உருகிவருகிறது. இதனால் துருவக் கரடிகள் அழிந்து வருகின்றன. இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் புவி வெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்தி துருவக் கரடிகளைப் பாதுகாப்பதற்கும் இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
உளவியல் வல்லுநர் பாவ்லோவ் நினைவு தினம் இன்று. இந்த பாவ்லவ் ஒரு சாதாரண ஆள் கிடையாது. 1849-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த இவான் பாவ்லோவ் 1904-ஆம் ஆண்டு மருத்துவ சோதனைகளுக்கான நோபல் பரிசு பெற்ற மாபெரும் விஞ்ஞானி. இவரது ஆராய்ச்சிகளின் விளைவுதான் பின்னாளில் மூளைச்சலவை (Brain-Wash) செய்வது எப்படி என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது. பாவ்லவ்வின் ஆராய்ச்சிகள் Classical Conditioning என்று பெயரிடப்பட்டு கிட்டதட்ட அனைத்துத் துறைகளிலும் பாடமாக உள்ளது. கிட்டதட்ட 12 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து 1903-ஆம் ஆண்டு தன்னுடைய ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிட்டார். தன்னுடைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பாவ்லவ் நாய்களையே பெரிதும் பயன்படுத்தினார். அவரது ஆராய்ச்சி மிகவும் சிம்பிளான ஒன்று: தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் நாய்களை வளர்த்து வந்த பாவ்லவ், அவற்றுக்கு உணவளிக்கும்போது ஒரு சிறிய உத்தியை கையாண்டார்.நாய்களுக்கு உணவு அளிக்கும் முன் அவர் ஒரு மணியை ஒலிக்கச்செய்து ஓசையை எழுப்பி, அதன் பின்னரே நாய்களுக்கு உணவை அளித்தார். தினமும் இதனை செய்துவர, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மணியோசை கேட்ட உடனே நாய்கள் அடுத்து உணவு வரப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டன. பின்னர் உணவு அளிக்காமலேயே வெறும் மணியோசையை வைத்தே நாய்கள் Salaivate செய்வதையும் Digestive Glands உணவுக்காக தயார் ஆவதையும் கண்டுணர்ந்தார் பாவ்லவ். இதுதான் Behavioural Scienceன் ஆரம்ப நிலை ஆராய்ச்சி. பாவ்லோவின் கண்டுபிடிப்பு ஜான் பி. வாட்சன் உள்ளிட்ட மற்ற சிந்தனையாளர்களிடையே பெரும் செல்வாக்கு செலுத்தியது மற்றும் பின்னாளில் உளவியல் மற்றும் உடலியலில் துறையில் பெரும் செல்வாக்கு பெற்றது மட்டுமல்லாமல் அரசு அதிகாரம் போன்ற சமூக அரசியல் நிர்வாகத்திலும் நடத்தையியல் உளவியல் பரந்துவிரிந்து பரவியது.
சாக்கரின் எனப்படும் செயற்கை இனிப்பு கண்டறியப்பட்ட தினம் இன்று (1879). சாக்கரின்’ (Saccharin) என்பது ஒரு பிரபலச் செயற்கை இனிப்பூட்டி. இது தற்செயலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஃபால்பெர்க் (Fahlberg) என்பவர் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சர்க்கரையில் கலப்படம் உள்ளதா என்பதை ஆய்வு செய்துகொண்டிருந்தார். ‘கோல் தார்’ (Coal tar) மீதான ஆராய்ச்சி அது. 1878-ல் ஒருமுறை அவர் கை கழுவாமல் ரொட்டித் துண்டைச் சாப்பிட்டார். அது வழக்கத்தைவிட அதிக இனிப்பாக இருந்தது. வியப்புடன் தன் விரல்களைச் சப்பினார். விரல்களும் இனித்தன. வியப்பு கூடியது. சோதனைச்சாலைக்கு விரைந்தார். அன்றைக்கு அவர் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திய கண்ணாடிக் குடுவை, தட்டு, துணைக் கருவிகள் எல்லாவற்றிலும் ஓர் உப்பு ஒட்டியிருந்தது. அதை ருசித்தார். எல்லாமே அதிக இனிப்பு. அந்தப் படிகத்தைப் பரிசோதித்தார். அது ‘பென்சாயிக் சல்ஃபிமைடு’ (Benzoic sulfimide) என்னும் வேதிப்பொருளாக இருந்தது. இது எப்படி உருவானது? முதல் நாளில் ஒரு அமிலத்தைக் கொதிக்கவைத்தவர் அதை நிறுத்த மறந்துவிட்டார். அது தொடர்ந்து கொதித்துச் சிதறி மேஜையிலிருந்த மற்ற இரு வேதிப்பொருள்களுடன் கலந்து புதிய பொருளாக உருமாறியிருந்தது. அதுதான் மேசையில் படிந்திருந்தது. அதைத் தனியாகத் தயாரித்து ‘சாக்கரின்’ என்னும் பெயரில் விற்பனைக்கு அனுப்பினார். இரண்டு உலகப் போர்களின்போது சர்க்கரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதற்கு மாற்றாக ‘சாக்கரின்’ பயன்பட்டது; அதைத் தொடர்ந்து, மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.
புரட்சியாளர் லெனினின் மனைவி நதியெஸ்தா குரூப்ஸ்கயா நினைவு தினம் இன்று நதியெஸ்தா கான்ஸ்தன்தீனவ்னா நாதியா குரூப்ஸ்கயா (Nadezhda Konstantinovna “Nadya” Krupskaya,26 பெப்ரவரி1869 – 27 பெப்ரவரி 1939)உருசியப் புரட்சியாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் சோவியத் ஒன்றியத்தில் 1929 முதல் 1939 இல் இறக்கும் வரை துணைக் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். ரஷ்யப் புரட்சியாளர் விளாதிமிர் லெனின் இன் மனைவி ஆவார்.
கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே நினைவு தினம் இன்று (1906). சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே (Samuel Pierpont Langley) ஆகஸ்ட் 22, 1834ல் இராக்சுபரி, மசாசூசட்சில் பிறந்தார். இவர் போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்றார். இலாங்லே ஆர்வார்டு வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த பிறகு, கணிதவியல் பேராசிரியராக அமெரிக்க நாவாயியல் கல்விக்கழகத்தில் சென்று சேர்ந்தார். உண்மையில் அங்கு அந்தக் கல்விக்கழகத்தின் சிறிய வான்காணகத்தை மீட்டு இயக்கச் சென்றார். இவர் 1867இல் அல்லெகேனி வான்காணகத்தின் இயக்குநரானார். மேலும் பென்னிசில்வேனியா மேற்குப் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியராகவும் விளங்கினார். இது இப்போது பிட்சுபர்கு பல்கலைக்கழகம் எனப்படுகிறது. இவர் 1887 இல் சுமித்சோனிய நிறுவனத்தின் மூன்றாம் செயலராகச் சேர்ந்தாலும் இப்பதவியில் 1891 வரை தொடர்ந்து இருந்தார். இலாங்லே கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்தவர் ஆவார். இது ஆரம்பத்தில் அகச்சிவப்பு கதிர்வீச்சை அளவிட பயன்படுகிறது. போலோமீட்டர் விஞ்ஞானிகளுக்கு ஒரு டிகிரி செல்சியஸின் 1 / 100,000 க்கும் குறைவான வெப்பநிலையின் மாற்றத்தைக் கண்டறிய உதவியது. இது பூமியில் சூரிய சக்தியின் அளவை அளவிடுவதற்கான அடித்தளத்தை அமைத்தது. அவர் 1881 ஆம் ஆண்டில் “தி போலோமீட்டர் மற்றும் கதிரியக்க ஆற்றல்” என்ற கட்டுரையை வெளியிட்டார். சந்திரனின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிடுவதற்கான முதல் முயற்சிகளில் ஒன்றை அவர் மேற்கொண்டார். பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மூலம் அகச்சிவப்பு கதிர்வீச்சின் குறுக்கீட்டை அவர் அளவிடுவது 1896 ஆம் ஆண்டில் ஸ்வாண்டே அர்ஹீனியஸால் பயன்படுத்தப்பட்டது. கார்பன் டை ஆக்சைடு அளவை எதிர்காலத்தில் இரட்டிப்பாக்குகிறது. மேலும் இலாங்லே வானூர்தியியல் வல்லுனரும் ஆவார். இவர்தான் சுமித்சோனிய வானியற்பியல் வான்காணகத்தை நிறுவியவர் ஆவார். கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே இதே பிப்ரவரி 27, 1906ல் தனது 71வது அகவையில் காலமானார்.
இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் “சந்திரசேகர ஆசாத்” (Chandra Shekhar Azad) நினைவு தினம் இன்று (1931) 1931ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி அலகாபாத்திலுள்ள ஆல்ப்ரெட் பூங்காவில் தீவிரமாக இளைஞர் ஒருவருக்கும், பிரிட்டிஷ் காவல்துறைக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருக்கிறது. நீண்ட நேரமாக நடைபெறும் சண்டையில் ஒரு முடிவு கிடைக்கவில்லை. சூழலில் திருப்புமுனையாக அந்த இளைஞனின் காலில் குண்டு பாய்ந்து விடுகிறது. அப்போது அங்கு ஒரு மரத்தின் மீது சாய்ந்து அந்த இளைஞர் சரிகிறார். துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டாதான். என்ன ஆனாலும் ஆங்கிலேயர் கையில் இறந்து விட கூடாது என்று அந்த இளைஞனின் கண்ணில் தீர்க்கமான முடிவு. அந்த ஒரு குண்டை தன் தலையில் சுட்டுக்கொண்டு அந்த இளைஞர் அங்கேயே உயிரை மாய்த்து கொள்கிறார். பின்னாட்களில் அந்த இளைஞரின் பெயரே அந்த பூங்காவின் பெயராக மாறியது. அந்த மரம் தேசபக்தி கொண்டவர்களின் புனித ஸ்தலமாக மாறியது. அந்த இளைஞரின் பெயர்தான் சந்திரசேகர் ஆசாத்.இவர் மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் பகத்சிங்கோடு தூக்கு மேடை ஏறியவர்களில் இவரும் ஒருவராக இருந்திருப்பார்.
தி கிரேட் ரைட்டர் சுஜாதா நினைவு நாளின்று! தமிழில் பெரும் வாசகர் பரப்பைக் கொண்டுள்ள எழுத்தாளர்களில் இன்றும் முக்கியமான ஒருவர் சுஜாதா. எஸ்.ரங்கராஜன் எனும் இயற்பெயருடைய இவர், சுஜாதா என்ற மனைவி பெயரிலேயே தனது நூல்களை எழுதியுள்ளார். இவர் 1935 மே 3-ல் சென்னையில் பிறந்தார். தனது சிறுவயதை திருச்சி ரங்கத்தில் கழித்துள்ளார். ஆண்டாள் பாசுரத்தைக்கூடத் தனக்கே உரித்தான நடையில் ஸ்மார்ட் ஃபோன் தலைமுறைத் தமிழர்களுக்குக் கொண்டு சென்ற சுஜாதாவின் எழுத்துகள், ஆங்கில ஃபான்ட்டில் அச்சேறாதது ‘கிண்டில்’ காலத்தின் சாபம் என்பதைத் தாண்டி வேறென்ன? மொழிபெயர்ப்பு சற்றுச் சிக்கலான பணி. மூல மொழியும் இலக்கு மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. அதைவிட மிக அத்தியாவசியத் தேவை, மூல மொழியின் கலாச்சாரத்தையும் இலக்கு மொழியின் கலாச்சாரத்தையும் அறிந்திருப்பது. மூல மொழியின் கலாச்சாரத்தை நம்மால் சரியாகக் கையாள முடிந்தாலும், சிலரின் எழுத்துகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். சிலரின் எழுத்துகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். உதாரணம், வைக்கம் முகம்மது பஷீர், தமிழில் லா.ச.ராமாமிர்தம், கி.ராஜநாராயணன் என்று பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் விட்டுப்போகாத ஒரு பெயர்… சுஜாதா தமிழ் எழுத்துலகில் சுஜாதா ஒரு ‘ஆல் ரவுண்டர்’. தள்ளுவண்டியில் கடலை விற்பவர், பொட்டலம் கட்ட வைத்திருக்கும் பத்திரிகைக் காகிதங்களைத் தொகுத்தால் கிடைக்கும் சுவாரஸ்யமான புத்தகம்போலத் தன் கதைகளில் சுவாரஸ்யமான மனிதர்களை நடமாட வைத்தவர். சுஜாதா தனது அறிவியல் புனைக்கதைகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் வசனம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டுள்ளார். சூரியனுக்குக் கீழும், சூரியனுக்கு மேலும் என எந்த விஷயத்தையும் எழுத்தில் கொண்டு வந்துவிடும் மாயவித்தைக் காரராக அவர் இருந்தார். தன் இறுதிக் காலம் வரை புதுப்புது எழுத்துப் பாணியை முயன்று பார்க்கும் ஒருவராகத் திகழ்ந்தார். அவரின் துள்ளலான நடையைப் பின்பற்றி, அவர் வாழ்ந்த காலத்தில் பலர் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். இன்று வலைப் பூக்களில் எழுதுபவர்கள் பலரது நடைக்கு உத்வேகமும் சுஜாதாவின் நடைதான். காரணம், அவர் கையாண்ட நெளிவு சுளிவுகள். குறிப்பாக ஒரு கதையில், ‘இறங் கினான்’ எனும் வார்த்தையை, ஒவ்வொரு எழுத்தாக மேலிருந்து கீழாக எழுதியிருப்பார். இதை ஆங்கிலத்தில் கொண்டு போவது சிரமம். அப்படியே எழுதினாலும் அது தட்டையாக அமைந்துவிடும். ‘மனைவி கிடைத்துவிட்டாள்’ என்ற கதையில் வரும் காட்சி இது: முதலிரவின்போது, நாயகி (வேணி)… ‘உங்களுக்குப் பிடிச்ச புத்தகம் எது?’ ‘வேணி’, ‘படிங்க!’ முதலில் அட்டைப் படத்தைப் பார்த்தான். பிரித்தான். பொருள் அடக்கத்தைத் தேடினான். முதல் அத்தியாயத்தில் ஆரம் பித்தான், ஓவியங்களை ரசித்தான், கவிதை களைத் தொட்டான், வார்த்தைகள், இடை வெளிகள், இடைச்செருகல்கள்… இதன் பொருளை ஆங்கிலத்தில் தந்து விட முடியும். ஆனால் சுஜாதாவின் அந்தக் குறும்பு..? மொத்தத்தில் தமிழ் இலக்கிய உலகில் பெரும்பணிகளைச் செய்துள்ள 2008 பிப்ரவரி 27 அன்று காலமான சுஜாதாவுக்கு நினைவஞ்சலி.