கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு பஸ்களில் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது. கர்நாடகாவில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகின்ற 1 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி இந்த தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து தேர்வு மையத்திற்கு இலவசமாக பயணிக்கலாம். ஆனால் தேர்வு நுழைவுச் சீட்டை காண்பித்து இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழக பேருந்துகளிலும் தேர்வு எழுதும் மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.