இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 20 வியாழக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 20-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி வியாழக்கிழமை 20.02.2025 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 08.03 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி இன்று காலை 11.46 வரை விசாகம். பின்னர் அனுஷம். ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

நம்பியவர்களால் சில நேரம் ஏமாற்றப்படுவீர்கள். காதலியின் டார்ச்சரால் வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் சில சிக்கல்களில் இருந்து மீண்டு வருவீர்கள். வியாபாரிகள் பணம் புரட்ட சிரமப்படுவார்கள். சந்திராஷ்டம நாள். எந்த விஷயத்திலும் எச்சரிக்கையுடன் நடந்தால் நஷ்டத்தை தவிர்ப்பீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே!

வீட்டில் திருமண நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்வீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி பண்ண அக்கறையுடன் வேலை பார்ப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமடைந்து போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கடன் சுமையை கணிசமாக குறைப்பீர்கள்.

மிதுன ராசி அன்பர்களே!

சுவாச பிரச்சனையால் அவதிப்படுவீர்கள். தொழிலுக்கு மறைமுக எதிர்ப்புகள் தோன்றுவதால் சங்கடப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். பெற்றோரின் மருத்துவ செலவுக்காக நகையை அடகு வைப்பீர்கள். சொத்து பிரச்சனைக்காக சகோதரர்களே கொடுக்கும் தொல்லைகளை சமாளிப்பீர்கள்.

கடக ராசி அன்பர்களே!

பிள்ளைகளின் பிரச்சனைக்காக பள்ளிக்கூடம் சென்று ஆசிரியரை சந்திப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மழலைச் செல்வம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்கு தேவையான பண உதவியை நண்பர்களிடமிருந்து பெறுவீர்கள். வெளியூர் பயணங்களுக்காக குடும்பத்தை பிரிந்து செல்வீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிர்ப்பானவர்கள் நண்பர்கள் என இரு தரப்பிடமிருந்தும் உதவி பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சாதனை படைப்பீர்கள். வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்கி பத்திரம் போடுவீர்கள். வெளிவட்டார செல்வாக்கு அதிகரித்து பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்த கழுத்து வலியில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி ராசி அன்பர்களே!

திடீரென்று ஏற்பட்ட தடங்கலால் வெளியூர் பயணத்தை ஒத்தி போடுவீர்கள். நல்லது நினைத்து உதவி செய்யப் போய் அவப் பெயரை சுமப்பீர்கள். வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்பட்டு மனச் சங்கடம் அடைவீர்கள். காதலியின் தொந்தரவால் இரவு தூக்கத்தை தொலைப்பீர்கள். உறவினர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் தோல்வி அடைவீர்கள்.

துலா ராசி அன்பர்களே!

கலகலப்பாக பேசி பெண்களின் மனதை கவர்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண பேச்சு வார்த்தையை முடித்து வைப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த கூடுதலாக முதலீடு செய்வீர்கள். கடுமையாக உழைத்து வியாபாரத்தை பெருக்கி பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். மனதை அழுத்திய கவலையை மாற்றுவீர்கள்.

விருச்சிக ராசி அன்பர்களே!

கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவிகளை தாமதமாக பெறுவீர்கள் வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய பணம் தற்போது கைக்கு வராமல் சிரமப்படுவீர்கள். உற்பத்தியை பெருக்கி முதலாளியின் பாராட்டைப் பெற கடுமையாக பாடுபடுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே!

ரத்த அழுத்தம் அதிகமாகி உடல் நிலையில் பாதிப்பை அடைவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டைச் செய்வீர்கள். நெருக்கு வட்டத்தில் வந்த திருமணப் பேச்சு வார்த்தை தள்ளிப் போவதால் விசனப்படுவீர்கள். சில்லரை வியாபாரிகள் மந்தமான வியாபாரத்தால் சிரமப்படுவீர்கள். ஐடியில் அலுப்பில்லாமல் வேலை பார்ப்பீர்கள்.

மகர ராசி அன்பர்களே!

நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையை தொழிலுக்காக எடுப்பீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். தள்ளாட்டமாக இருந்த வியாபாரத்தை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதமின்றி வருவதால் சந்தோஷப்படுவீர்கள்.

கும்பராசி அன்பர்களே!

உங்களுக்கு பாதகம் விளைவித்த நபருக்கு உதவி செய்வீர்கள். கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்கவேண்டிய காண்ட்ராக்ட்கள் தடையின்றி பெறுவீர்கள். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அபிரிமிதமான பலனை அடைவீர்கள். வெளியூர்களில் கிளைகள் திறக்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

மீனராசி அன்பர்களே!

இழந்த பொருள்களை திரும்பப் பெறுவீர்கள். தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பீர்கள். அரசு வகையில் வரவேண்டிய தொகைகளை உரிய நேரத்தில் பெறுவீர்கள். . வரவுகள் அதிகரிப்பதால் சேமிப்பை உயர்த்துவீர்கள். தக்க சமயத்தில் வங்கியில் இருந்து கடன் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த வேலை மாறுதல் கிடைத்து செல்வீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *