வரலாற்றில் இன்று (10.01.2025)

 வரலாற்றில் இன்று (10.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 10 (January 10) கிரிகோரியன் ஆண்டின் 10 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 355 (நெட்டாண்டுகளில் 356) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

9 – மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது.
236 – அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார்.
1645 – முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1806 – கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
1840 – ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.
1863 – உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
1881 – யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[1]
1916 – முதலாம் உலகப் போர்: எர்சுரும் சமரில் உருசியா உதுமானியரைத் தோற்கடித்தது.
1917 – பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இது 1919 சூன் மாதம் வரை தொடர்ந்தது.
1920 – வெர்சாய் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக முடிவுற்றது.
1924 – பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் உயிரிழந்தனர்..
1946 – லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
1946 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக வானொலி அலைகளை நிலாவில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.
1954 – பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து திரேனியக் கடலில் வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
1962 – பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை உயிரிழந்தனர்.
1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர தாஷ்கந்து உடன்பாட்டில் லால் பகதூர் சாஸ்திரி, அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1972 – சேக் முஜிபுர் ரகுமான் பாக்கித்தானில் 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான வங்காளதேசத்திற்குத் திரும்பினார்.
1974 – யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
1984 – 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
1985 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி தலைவர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அரசுத்தலைவர் ஆனார்.
1989 – கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
1995 – உலக இளையோர் நாள் பிலிப்பீன்சில் இடம்பெற்றது.
2001 – விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
2005 – தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.
2007 – கினியில் அரசுத்தலைவர் லன்சானா கொண்டேக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
2013 – பாக்கித்தானில் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
2015 – மொசாம்பிக்கில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 56 பேர் முதலையின் பித்தநீர் கலக்கப்பட்ட பியரை அருத்தியதால் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1573 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)
1775 – இரண்டாம் பாஜி ராவ், மராத்திய பேரரசின் கடைசித் தலைமை அமைச்சர் (இ. 1851)
1929 – பாலி சாம் நரிமன், இந்திய சட்ட அறிஞர்
1931 – ஆர். சூடாமணி, தமிழகப் பெண் எழுத்தாளர் (இ. 2010)
1931 – நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், மலேசிய மதகுரு, அரசியல்வாதி (இ. 2015)
1933 – கி. கஸ்தூரிரங்கன், தமிழக இதழாளர், எழுத்தாளர் (இ. 2011)
1933 – குர்தியால் சிங், பஞ்சாபி எழுத்தாளர் (இ. 2016)
1936 – இராபெர்ட் உட்ரோ வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1937 – முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (இ. 2014)
1938 – டொனால்ட் குனுத், அமெரிக்கக் கணினிவியலாளர்
1940 – கே. ஜே. யேசுதாஸ், இந்தியப் பாடகர்
1943 – மு. செ. விவேகானந்தன், ஈழத்துக் கலைஞர் (இ. 1999)
1949 – லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை, செயற்பாட்டாளர் (இ. 2002)
1967 – பழனி திகாம்பரம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிலதிபர்
1974 – கிருத்திக் ரோஷன், இந்திய நடிகர்
1984 – கல்கி கோய்ச்லின், இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

314 – மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)
1761 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)
1775 – ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (பி. 1697)
1778 – கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய தாவரவியலாளர், மருத்துவர் (பி. 1707)
1904 – ஜீன் லியோன் ஜேர்மி, பிரான்சிய ஓவியர், சிற்பக் கலைஞர் (பி. 1824)
1951 – சிங்ளேர் லுயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1885)
1957 – கேப்ரியெலா மிஸ்திரெல், நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (பி. 1889)
1969 – சம்பூர்ணாநந்தர், இராசத்தானின் 2வது ஆளுநர் (பி. 1891)
2005 – சங்கர் ராஜி, இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி (பி. 1949)
2006 – ஆர். எஸ். மனோகர், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
2007 – எஸ். சர்வானந்தா, இலங்கை நீதிபதி, மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (பி. 1923)
2008 – பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1959)

சிறப்பு நாள்

பெரும்பான்மையின ஆட்சி நாள் (பகாமாசு)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...