வரலாற்றில் இன்று (02.01.2025)

 வரலாற்றில் இன்று (02.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 2 (January 2) கிரிகோரியன் ஆண்டின் இரண்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 363 (நெட்டாண்டுகளில் 364) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

366 – அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர்.
533 – மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும்.
1492 – எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது.
1757 – கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் சியார்ச் வாசிங்டன் தலைமையில் இட்ரென்டன் அருகே நடந்த சமரில் பிரித்தானியப் படைகளை பின்வாங்கச் செய்தன.
1782 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
1788 – ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 4வது மாநிலமாக இணைந்தது.
1791 – வடமேற்கு இந்தியப் போர்: ஒகைய்யோ மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் படுகொலை செய்தனர்.
1793 – உருசியாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன.
1818 – பிரித்தானியக் குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் நிறுவப்பட்டது.
1893 – வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
1905 – உருசிய-சப்பானியப் போர்: உருசியக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் சப்பானியரிடம் சரணடைந்தனர்.
1920 – ஐக்கிய அமெரிக்காவின் பல நகரங்களில் 6,000 இற்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர்.
1921 – எசுப்பானியாவின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: வேல்ஸில் கார்டிஃப் என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: மணிலா சப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் நியூரம்பெர்க் நகரத்தின் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.
1954 – பத்மசிறீ, பத்மபூசண், பத்மவிபூசன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
1955 – பனாமாவின் அரசுத்தலைவர் ஒசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
1959 – சந்திரனை நோக்கிய முதலாவது விண்கலம் லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1963 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் தமது முதலாவது முக்கிய வெற்றியைப் பெற்றது.
1971 – கிளாஸ்கோவில் காற்பந்தாட்ட அரங்கு ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் உயிரிழந்தனர்.
1974 – ஓப்பெக் தடையை அடுத்து, பெட்ரோல் சேமிப்புக்காக, வாகனங்களுக்கான 55 மை/மணி என்ற உச்ச வேகத்தை அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.
1975 – பீகார், சமஸ்திபூர் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ரெயில்வே அமைச்சர் லலித் நாராயண் மிசுரா படுகாயமடைந்தார்.
1976 – தெற்கு வடகடல் கரைகளில் பலத்த காற்று வீசியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழந்தனர்.
1978 – பாக்கித்தான், முல்தான் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1982 – சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.
1992 – சியார்சியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் சிவியாத் கம்சக்கூர்தியா பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.
1993 – யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை: கிளாலி நீரேரியில் 35-100 பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1999 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர்.
2004 – ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டியது.
2006 – திருகோணமலை மாணவர்கள் படுகொலை: இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 – மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
2008 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

பிறப்புகள்

1873 – லிசியே நகரின் தெரேசா, பிரான்சியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1897)
1888 – எம். ஆர். சேதுரத்தினம், தமிழக அரசியல்வாதி
1914 – நூர் இனாயத் கான், உருசிய-ஆங்கிலேய உளவாளி (இ. 1944)
1920 – ஐசாக் அசிமோவ், உருசிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (இ. 1992)
1920 – ஜார்ஜ் எர்பிக், அமெரிக்க வானியலாளர் (இ. 2013)
1935 – க. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி
1938 – செ. இராசு, தமிழகக் கல்வெட்டறிஞர், தொல்லியலாளர், நூலாசிரியர் (இ. 2023)
1940 – எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர்
1940 – அ. சண்முகதாஸ், இலங்கை கல்வியாளர், தமிழறிஞர்
1943 – ஜேனட் அக்கியூழ்சு மத்தேய், துருக்கிய-அமெரிக்க வானியலாளர் (இ. 2004)
1943 – பாரிசு மான்கோ, துருக்கிய பாடகர், தயாரிப்பாளர் (இ. 1999)
1960 – ராமன் லம்பா, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 1998)
1961 – கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் தளபதி (இ. 1993)
1964 – ருமேஸ் ரத்னாயக்க, இலங்கைத் துடுப்பாளர்

இறப்புகள்

1782 – கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் – கண்டியின் கடைசி அரசன்.
1892 – ஜார்ஜ் பிடெல் ஏரி, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1801)
1960 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)
1960 – சி. ஆர். நாராயண் ராவ், இந்திய விலங்கியல் மருத்துவர், ஊர்வனவியலாளர் (பி. 1882)
1984 – யெவ்கேனி கிரினோவ், சோவியத்-உருசிய வானியலாளர், புவியியலாளர் (பி. 1906)
1988 – வரதராஜன் முதலியார், இந்தியக் கொள்ளை, கடத்தல் காரர் (பி. 1926)
1989 – சப்தர் ஆசுமி, இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1954)
2012 – கே. ஜே. சரசா, தமிழ்நாட்டின் பரத நாட்டிய ஆசிரியை, முதலாவது பெண் நட்டுவனார்
2013 – கெர்டா லெர்னர், ஆத்திரிய-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1920)
2016 – அ. பூ. பர்தன், இந்திய அரசியல்வாதி (பி. 1924)
2024 – காட்பிரீடு மூன்சென்பெர்கு, செருமானிய இயற்பியலாளர் (பி. 1940)

சிறப்பு நாள்

மூதாதையர் நாள் (எயிட்டி)
படைத்துறையினரின் வெற்றி நாள் (கியூபா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...