இன்றைய ராசி பலன்கள் – 24-02-2020 திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்
மனதில் எண்ணிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : முயற்சிகள் அதிகரிக்கும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : உறவுநிலை மேம்படும்.
—————————————
ரிஷபம்
சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். அலைச்சல்களால் வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்படும். வாழ்க்கை துணையின் சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : சிக்கல்கள் நீங்கும்.
ரோகிணி : மதிப்புகள் உயரும்.
மிருகசீரிஷம் : நிர்வாகத்திறன் மேம்படும். 
—————————————
மிதுனம்
உடல்தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். பங்காளிகளின் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : வசதிகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
கடகம்
மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும். உடல் அசதிகளால் பணிகளில் காலதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : குழப்பமான நாள்.
பூசம் : அமைதி வேண்டும்.
ஆயில்யம் : சோர்வு உண்டாகும் 
—————————————
சிம்மம்
கால்நடைகளால் இலாபம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். 
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்
மகம் : நட்பு வட்டம் அதிகரிக்கும்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
கன்னி
செய்யும் செயல்களில் புத்திக்கூர்மை வெளிப்படும். தனிமையான சூழ்நிலைகளால் தொழில் சார்ந்த புதிய சிந்தனைகள் மலரும். நெருக்கமானவர்களை உதாசீனப்படுத்தாமல் அரவணைத்து செல்லவும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
அஸ்தம் : சிந்தனைகள் மலரும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும். 
—————————————
துலாம்
நிர்வாகம் தொடர்பான பணிகளில் மாற்றம் உண்டாகும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் சாதகமாகும். புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்புகள் குறையும். புத்திரர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மாற்றம் உண்டாகும். 
சுவாதி : லாபம் அதிகரிக்கும்.
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
—————————————
விருச்சிகம்
பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும். தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரிகளிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். எதிர்பாராத சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : சாதகமான நாள். 
அனுஷம் : கவனம் வேண்டும். 
கேட்டை : மனமகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
தனுசு
விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். பணியில் எடுத்த செயலை முடித்து காட்டுவதால் செல்வாக்கு உயரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : மாற்றம் உண்டாகும்.
உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
—————————————
மகரம்
நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் நல்ல செய்தியை தரும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள். 
திருவோணம் : முடிவுகள் சாதகமாகும்.
அவிட்டம் : அமைதி வேண்டும்.
—————————————
கும்பம்
இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் கிடைக்கும் ஆலோசனைகள் மற்றும் ஆதரவால் தனலாபம் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறக் கூடிய அனுகூலமான சூழல் அமையும். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
சதயம் : தனலாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————
மீனம்
நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்காக சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் :மயில் நீலம் 
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ரேவதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
————————————-

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...