ஜம்மு-காஷ்மீரில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

 ஜம்மு-காஷ்மீரில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

   இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் ரகசிய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டனர்.

  அப்போது சங்கம் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...