இன்றைய ராசி பலன்கள் – 22-02-2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்
செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : நன்மை உண்டாகும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
—————————————
ரிஷபம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமண வரன்கள் கைகூடி வரும். செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்படவும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். புதிய நபர்களின் பேச்சுக்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : இலாபம் கிடைக்கும்.
—————————————
மிதுனம்
மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் மற்றவர்களின் பணிகளையும் கூடுதலாக பார்க்க நேரிடும். கலைஞர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். தலைமை பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
—————————————
கடகம்
தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும். 
பூசம் : சுபவிரயங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள். 
—————————————
சிம்மம்
தந்தைவழி உறவுகளால் சாதகமான சூழல் ஏற்படும். செய்யும் பணியில் செல்வாக்கு உயரும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தாய் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8 
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 
மகம் : சாதகமான நாள். 
பூரம் : நிதானம் வேண்டும். 
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————
கன்னி
எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். காது சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றும். பணியில் கவனத்துடன் இருக்கவும். உறவுகளிடம் நிதானம் வேண்டும். எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
—————————————
துலாம்
நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மையான சூழல் நிலவும். நண்பர்களுடன் மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : மகிழ்ச்சியான நாள். 
சுவாதி : நன்மை உண்டாகும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
விருச்சிகம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களுக்கு இடையே விரிசல்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : வெற்றி கிடைக்கும்.
கேட்டை : விரிசல்கள் உண்டாகலாம்.
—————————————
தனுசு
பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : ஆதாயம் உண்டாகும்.
பூராடம் : புதிய நட்பு கிடைக்கும்.
உத்திராடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
—————————————
மகரம்
நீண்ட நாள் காணாத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். மனை விவகாரங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். பொதுத்தொண்டில் உள்ளவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : சிக்கல்கள் குறையும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
—————————————
கும்பம்
அரசாங்கத்திடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அருள் தரும் வேள்விகளில் பங்கு பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். தந்தையுடன் எழுந்த பிரச்சனைகள் குறையும். பொருட்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாகனங்களால் விரய செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். 
சதயம் : பிரச்சனைகள் குறையும். 
பூரட்டாதி : வாய்ப்புகள் அதிகரிக்கும்.
—————————————
மீனம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி இன்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
ரேவதி : இன்பம் உண்டாகும். 
—————————-

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...