வட மாவட்டங்களில் நாளை முதல் டிச. 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் நாளை முதல் டிச. 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கப்ட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், நேற்று முன்தினம் (டிச. 7) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.
எனவே அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதி களை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகத்தின் டெல்டா மற்றும் வட மாவட்டங்களின் சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் அடுத்த ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி 17-ம் தேதி அல்லது 18-ம் தேதி வங்கக்கடலில் உருவாக உள்ளதாகவும், இது தாழ்வு மண்டலமாகவும், சாதாரண புயலாகவும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.