ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவுர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.இவர் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” (1942) ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டார்.
பின்பு இவர் லேபர்லா ஜர்னல் (1949) என்னும் இதழைத் தொடங்கினார்.
1983ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பணிகளை கொண்டுவந்தார். சமூக அறிவியல் மருத்துவ பட்டம், தாமரைப் பட்டயம் போன்ற விருதுகளையும், மேலும் இவர் எழுதிய சோவியத் நாடுகளுடன் காமராஜரின் பயணம் என்ற நு}லுக்கு ரஷ்யாவின் ‘சோவியத் லேண்ட்” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.
உண்மையான தேசபக்தரும், வழக்கறிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ஆர்.வெங்கட்ராமன் தனது 98வது வயதில் (2009) மறைந்தார்