டிஎன்பிஎஸ்சி முறைகேடு:

 டிஎன்பிஎஸ்சி முறைகேடு:

ஜெயக்குமாரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல்; மேலும் ஒருவர் கைது…!!

    சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளில் இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாயை சிபிசிஐடி காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர்.

   அதே சமயம், குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம், இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

   இதுவரை, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு வழக்கில் 3 பேரும், 20 பேர் குரூப் 4 முறைகேடு வழக்கிலும், குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்- 4 தோ்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன்பு சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 20 பேரை கைது செய்தது.

   இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்- 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கை பதிந்து, 19 பேரை கைது செய்தது. இந்த வழக்குகளில் இரு டிஎன்பிஎஸ்சி ஊழியா்கள், 3 காவலா்கள் மற்றும் தோ்வா்கள் கைது செய்யப்பட்டனா். இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது.

    இந்தத் தோ்வில் லஞ்சம் கொடுத்து தோ்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூா் அருகே உள்ள வடமருதூா் மேட்டுக்காலனி கிராமத்தைச் சோ்ந்த மு.நாராயணன் என்ற சக்தி என்பவரைப் பிடித்து சிபிசிஐடியினா் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா். வி.ஏ.ஓ. தோ்வு முறைகேடு வழக்குத் தொடா்பாக இது வரை 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

   இதற்கிடையே குரூப்- 4 தோ்வு முறைகேடு வழக்கில் ஓம்காந்தனின் கூட்டாளிகளாக செயல்பட்ட எண்ணூா் அன்னை சிவகாமிநகரைச் சோ்ந்த க.காா்த்திக் (39), த.செந்தில்குமாா் (36), பெரம்பூா் ஜி.கே.எம். காலனியைச் சோ்ந்த ச.சா்புதீன் (42) ஆகிய 3 பேரை சிபிசிஐடியினா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா்.

   இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ரா.மரியலிஜோஸ்குமாா் (32) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். இவா், குரூப்- 4 தோ்வு விடைத்தாள்களை ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவந்தபோது, டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தனின் காரை ஓட்டி வந்துள்ளாா்.

   இந்த முறைகேட்டின் முக்கிய குற்றவாளி ஜெயக்குமாரின் காா் பழுதானதால், அவரது காரில் இருந்து திருடப்பட்ட விடைத்தாள்களை ஓம்காந்தன் காருக்கு மாற்றி கொண்டு வருவதற்கு உதவியாக இருந்துள்ளாா் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

  இந்த கைது மூலம் குரூப்- 4 தோ்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது. அதேவேளையில் 3 முறைகேடு வழக்குகளிலும் கைதானவா் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், குரூப்-4 தோ்வு முறைகேடு வழக்குத் தொடா்பாக சிபிசிஐடியினா், மேலும் பலரைத் தேடி வருகின்றனா்.
 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...