முடங்கிய ட்விட்டர்! என்ன காரணம்?

 முடங்கிய ட்விட்டர்! என்ன காரணம்?

சமூக வலைதளமான ட்விட்டர் சனிக்கிழமை அதிகாலை முடங்கியதில் அதன் பயனாளர்கள் அவதிக்குள்ளாயினர்.

   பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர் என்று பலர் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களுடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே எளிய முறையில் கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் உலகளவில் ட்விட்டர் பயனாளர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.

   இந்த நிலையில், ட்விட்டர் வலைதளம் சனிக்கிழமை அதிகாலை சுமார் 20 நிமிடங்களுக்கு முடங்கியது. இதனால் அதன் பயனாளர்கள் அவதிக்குள்ளாயினர். பின்னர் அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

   இதுகுறித்து ட்விட்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ட்விட்டர் பயன்பாடு சில நிமிடங்களுக்கு தடைப்பட்டது. இதனால் பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளைப் பயன்படுத்த முடியாதது வருத்தமளிக்கிறது. தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது. தடைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணத்தை ட்விட்டர் வெளியிடவில்லை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...