பாதையோரம் பயணப்படு
பாதையோரம் பயணப்படு
நகர்ந்தால்தான் நதியழகு.வளர்ந்தால் தான் செடி அழகு.
( விடை தேடும் பயணம் தான் வாழ்க்கை சிலருக்கு விடையே தெரியவில்லை)
பலருக்கு விடையே புரியவில்லை.
என் வெற்றியின் எண்ணங்கள் மட்டும் முன்னோக்கிச் செல்ல நான் மட்டும் ஏன் பின்னோக்கி செல்கின்றேன். இந்த சமுதாயம் பாலின வேறுபாடு கருதி ‘வெற்றியின் எண்ணங்களை’ ஏன் தடை செய்கின்றது.?
தடைகளை நோக்கி செல்லும் என் வெற்றிப் பயணம்.
பாதையோரம் என் பயணம்:
நிற்காமல் முன்னேறினால் பாதைகள் உண்டாகும். ஆனால் பாதையில் கற்கள், முட்கள் நிறைந்த பகுதிகளை நாம் கடந்து தான் செல்ல வேண்டும். அதேபோல இந்த சமுதாயம் பாலின கேலி கிண்டல் இதைத் தாண்டி செல்வதுதான் நம் பாதையின் வெற்றி. இதைத் தாண்டிதான் ….
இலக்கை நோக்கி செல்ல தடை:
“வெற்றியோ,தோல்வியோ கடந்து செல்லுங்கள்.இன்பம் வந்தால் ரசித்துச் செல்லுங்கள் துன்பம் வந்தால் சகித்துக் கொள்ளுங்கள். ஓடுங்கள் நதியாக இலக்கை அடையும் வரை.”
என் இலக்கு என்னுடைய வெற்றி அது எதுவாகினும் அதை அடைய முடியும் என்று நம்பிக்கை வையுங்கள். என்னுடைய இலக்கு நான் தேர்ந்தெடுத்தது மாடலிங் துறை. அந்தத் துறையில் நான் செல்வதற்கு கூட இந்த சமுதாயத்திலும் கேட்க வேண்டியதாய் இருக்கிறது.
என் சமுதாயத்தின் எதிர்பார்ப்பும் எதிரொலிப்பும்:
“எவரையும் வெற்றுக் காகிதம் என ஒருபோதும் எண்ணாதே. பட்டமாய் ஒரு நாள் நான் உயரமாய் பறப்பேன். அன்று நீ அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்”.
என் வெற்றிக்குப் பின்னால் என் சமூகம் இருக்கும் என எண்ணினேன். ஆனால் என் சமுதாயமோ என்னிடம் எதிர்பார்ப்பது சற்று வித்தியாசமானதாக இருந்தது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் யார் தான் நம்மிடம் இருப்பார்? எனக்கான தேடல்கள் அதிகமாக இருந்தது.
அதில் நான் தேர்ந்தெடுத்த இடம் சாதிக்கப் பிறந்த இந்த சமூக அமைப்பு.
இச்சையால் கிடைத்த ஏமாற்றம்:
” கனவோடு ஆரம்பித்து கண்ணீரோடு முடிவது பலரின் அன்பின் பயணம் “. நானும் காதல் வயப்பட்டேன். சிறிது காலம் கனவோடு சென்றது.
ஆனாலும் பல கசப்பான வாழ்க்கை தேர்ந்தெடுத்தது என் தவறு. ஆனாலும் அதில் நான் சற்று கவனமாக இருந்தேன். ஒரு ரோஜா கூட்டத்தில் விழுந்தேன் முள் குத்தியது. முள் குத்தியதும் விழித்துக் கொண்டேன்.
இறுமாப்போடு நான்:
வழிப்பயணங்கள் நமக்கு எவ்வளவு இடையூறு கொடுத்தாலும் அதை தாண்டி செல்வது தான் நம்முடைய வெற்றிப் பாதை.
என் வெற்றிப் பாதை ஆரம்பித்தது. தான் சாதிக்கப் பிறந்த சமூக அமைப்பு. சமுதாயத்தின் ஊக்குவிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் நான் எனக்குப் பிடித்த மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். அதிலிருந்து ஆரம்பித்தது தான் என்னுடைய வாழ்க்கை எனும் பயணம். வாழ்க்கையின் பாதை இந்த வெற்றி சாதிக்கப் பிறந்த சமூக அமைப்பு.
முடிவுரை:
“முடிவுரை தெரிந்தும் கூட முடிவில்லாத இந்த வாழ்க்கை பயணம் ஏனோ? “
பதில் தெரியாத கேள்வியோடு கட்டுரை முடிகிறது………….
–நிரஞ்சனா. கா .
-கட்டுரை தொகுப்பு
திவன்யா பிரபாகரன்