ஒரு வழியாக உருவான ‘பெஞ்சல்’ புயல் (FENGAL)..!

 ஒரு வழியாக உருவான ‘பெஞ்சல்’ புயல் (FENGAL)..!

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மதியம் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் (FENGAL pronounced as FENJAL) என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா சூட்டியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தற்போது நாகப்பட்டினத்தின் கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென் கிழக்க 360 கி.மீ தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது தமிழகத்தை நெருங்கி வந்த நிலையில் தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு பெஞ்சல் (FENGAL) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்தது. இந்த புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகம் புதுவை இடையே அதாவது காரைக்கால்- மகாபலிபுரம் இடையே நாளை (நவ.30) பிற்பகல் புயலாகவே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் கரையை கடக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. மழையின் காரணமாக இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். நேற்று காலை முதலே சென்னையில் பலத்த காற்று வீசியது. இதனால் ஊட்டி, கொடைக்கானல் போல் குளிர்ச்சியாக இருந்தது.

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்த மழையின் அளவு 5 செ.மீ பதிவாகியுள்ளது. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 செ.மீ. மழையும் நந்தனத்தில் 4.6 செ.மீ. மழையும் தரமணி, நுங்கம்பாக்கத்தில் தலா 4.3 செ.மீ. மழையும் பெய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வாறு புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெங்கல் என்ற பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது நேற்று முன் தினம் இரவு புயலாக மாறும் என கணிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை முதலே இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் நகரும் வேகம் குறைந்ததால் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்படும் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் புயலாக மாறாது என நேற்றைய தினம் கணிக்கப்பட்டுள்ளது. நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்தமாகவே காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் . பிறகு காற்றழுத்தமாக வலுவிழக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இயற்கையின் மாற்றத்தால் புயலாக வலுபெறுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ஃபெங்கல் என்ற பெயரே மீண்டும் வைக்கப்படும் என தெரிகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...