300 ரூபாய் மோசடியில் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை காஞ்சிபுரத்தில் ருசிகரம் !
வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. வயது முதிர்ந்தவரான இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரத்தில் நடைபெறும் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். கடந்த 2015-ல் பாலுசெட்டி சத்திரம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது காஞ்சிபுரம், சேதுராயன் தெருவைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் அந்த மூதாட்டியிடம் 300 ரூபாய்க்குக் காய்கறிகளை வாங்கினார்
அந்த மூதாட்டியிடம் மூன்று 100 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் சென்றபிறகுதான், `அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாதவை, கலர் ஜெராக்ஸ் நோட்டுகளைக் கொடுத்து தன்னை ஏமாற்றிவிட்டார்
அவர் அடுத்தவாரமும் அதேமூதாட்டியிடம் காய்கறி வாங்கப் போக மாட்டிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் சுதர்சன் ஒப்படைக்கப்பட்டார். கலர் ஜெராக்ஸ் எடுக்க அவர் பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருள்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டு அச்சடித்தது, புழக்கத்தில் விட்டது, மூதாட்டியை ஏமாற்றியது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் சுதர்சன் மீது காவல்துறையினர் வழக்கு
பதிவு செய்தனர்.
காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நேற்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் விரைவு நீதிமன்ற நீதிபதி கயல்விழி, `குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் அபராதத்துடன், 37 ஆண்டுகள் சிறைத் தண்டனையை
அனுபவிக்க வேண்டும்’ எனத் தீர்ப்பளித்தார்.