இன்றைய ராசி பலன்கள் – 31-01-2020 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவை தரும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
—————————-
ரிஷபம் :
தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.
ரோகிணி : புத்துணர்ச்சி ஏற்படும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
—————————-
மிதுனம் :
கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் மேன்மையான சூழல் அமையும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : மேன்மையான நாள்.
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
—————————-
கடகம் :
உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலைகளை தாங்களே செய்து முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூசம் : சோர்வு உண்டாகும்.
ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.
—————————-
சிம்மம் :
தந்தையின் சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நிர்வாகத்தில் செய்யும் சில மாற்றங்களால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். சிந்தனையில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : இன்னல்கள் குறையும்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
—————————-
கன்னி :
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். தனவரவு மத்திமமாகவே இருக்கும். செய்யும் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். உடைமைகளை கவனமாக வைத்து கொள்ளவும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : மந்தத்தன்மை உண்டாகும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
—————————-
துலாம் :
வர்த்த பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். கூட்டாளிகளால் சுபவிரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : சிந்தனைகள் தோன்றும்.
சுவாதி : நட்பு கிடைக்கும்.
விசாகம் : அபிவிருத்தி உண்டாகும்.
—————————-
விருச்சிகம் :
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நண்பர்களிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பொழுதுபோக்கு செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : விருப்பங்கள் நிறைவேறும்.
அனுஷம் : துரிதம் ஏற்படும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.
—————————-
தனுசு :
பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நற்பேறுகள் வாய்க்கப்பெறுவீர்கள். இஷ்ட தெய்வங்களை வணங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். மனதில் ஏற்பட்ட ஐயங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.
—————————-
மகரம் :
வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று. நரீ ;வழி வியாபாரங்களால் சுமாரான தனவரவு உண்டாகும். வாகனப் பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.
—————————-
கும்பம் :
பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தூர தேச பயணங்களை மேற்கொள்ள முயல்வீர்கள். இளைய உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சதயம் : பயணங்கள் சாதகமாகும்.
பூரட்டாதி : முயற்சிகள் அதிகரிக்கும்.
—————————-
மீனம் :
அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழில் இலாபம் உண்டாகும். குடும்ப நபர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சதுர்யமான பேச்சுக்களால் பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : இலாபம் உண்டாகும்.
ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.
—————————-
  – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...