இன்றைய ராசி பலன்கள் – 30-01-2020 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
மூத்த சகோதரர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமாக செயல்படவும். பொதுக்கூட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : ஆதரவுகள் கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
———————————-
ரிஷபம் :
புதிய ஆராய்ச்சிகள் சம்பந்தமான தேடல் உருவாகும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். பூர்வீக சொத்துக்களால் இலாபம் அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களால் தனலாபம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : தேடல் உருவாகும்.
ரோகிணி : நினைவாற்றல் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : இலாபம் ஏற்படும்.
———————————-
மிதுனம் :
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : சாதகமான சூழல் அமையும்.
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
———————————-
கடகம் :
எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : முயற்சிகள் மேலோங்கும்.
பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மேன்மையான நாள்.
———————————-
சிம்மம் :
பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : அமைதியுடன் செயல்படவும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
———————————-
கன்னி :
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் மதிப்புகள் உயரும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சஞ்சல எண்ணங்களால் மன வருத்தம் உண்டாகும். புதிய திட்டம் ஒன்றை வகுத்து அதை செயல்படுத்த முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : புதிய நட்பு கிடைக்கும்.
அஸ்தம் : மதிப்புகள் உயரும்.
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
———————————-
துலாம் :
பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் வரும். புதிய நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதாரம் மேன்மையடையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : ஆசிகள் கிடைக்கும்.
———————————-
விருச்சிகம் :
தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். உறவுகளின் ஆதரவுகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தலைமைப் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடுகள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : வசதிகள் மேம்படும்.
———————————-
தனுசு :
செய்யும் பணிகளில் மற்றவர்களின் விமர்சனங்கள் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். புதிய வகை ஆடைச்சேர்க்கை உண்டாகும். அரசாங்கம் சம்பந்தமான செயல்களில் அனுகூலம் ஏற்படும். பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : அபிவிருத்தி உண்டாகும்.
———————————-
மகரம் :
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் செய்வீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு கூடுதலான பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : முயற்சிகள் மேம்படும்.
திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.
அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.
———————————-
கும்பம் :
மகான்களின் தரிசனம் கிடைக்கும். பணிகளில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நிதானமாக அனுசரித்து செல்லவும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை, சச்சரவுகள் குறைந்து புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
———————————-
மீனம் :
தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : புதிய நட்பு கிடைக்கும்.
———————————-
    – ஜோதிடர் அ.மோகன்ராஜ

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...