கேரள மாணவி, ஆன்ரோஸ் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயிரிழப்பு
கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21). அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் சென்ற மாதம் 21-ம் தேதியில் இருந்து காணவில்லை.
இது குறித்த போலீசாரின் அறிக்கையில் அதில் மாணவி , ஆன்ரோஸ் ஆபத்தான நிலையில் இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் , ஆன்ரோஸ் உடல் பல்கலைக் கழகத்தில் உள்ள ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் உடலில் காயங்கள் ஏதுமில்லாததால் இது ஒரு விபத்து என்றே போலீசார் கருதுகின்றனர். இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஆன்ரோஸ் பியானோ வாசிப்பதில் சிறந்து விளங்கியதோடு மிகவும் புத்திசாலியான மாணவி என்றும் பெயரெடுத்தவர். அவரது மரணம் சக மாணவர்களை அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் ஆளாக்கியுள்ளது. இதனிடையில் ஆன்ரோஸ் ஒரு புத்திசாலித்தனமான பெண்ணாவார். அவர் குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்கிறோம் என பல்கலைக்கழகம் சார்பில் இரங்கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21). அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் சென்ற மாதம் 21-ம் தேதியில் இருந்து காணவில்லை.