வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்..!
மகாராஷ்டிரத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைவரும் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதேபோல், ஜார்கண்ட மாநில சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. அதன்படி, 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று 2ஒது கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்குப்பதிவில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்:
” மகாராஷ்டிரத்தில் இன்று சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்று ஜனநாயகத் திருவிழாவிற்கு மேலும் அழகு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தருணத்தில் இளைஞர்கள், பெண்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.