இந்த ரூல்ஸ்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமாம்

 இந்த ரூல்ஸ்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமாம்
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்:-

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஃபிக்ஸட் டெபாஸிட் (FD) கணக்கிலிருந்து பிபிஎஃப் கணக்கு வரை, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது. 
“உங்களுடைய தேவை என்னவாக இருந்தாலும் – உங்கள் நிதிகளின் முதலீடு அல்லது உங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான நிதி உருவாக்க எஸ்பிஐ வங்கியில் நிச்சயம் ஒரு சேமிப்பு முறை இருக்கும்.” என sbi.co.in இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. ஃபிக்ஸட் டெபாஸிட் (எஃப்.டி) : எஸ்.பி.ஐ வங்கியில் எஃப்.டி தொடங்குபவர்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் சேமிக்கலாம். மேலும் சேமிப்பு பணம் செலுத்தும்போது தங்களின் தேவைக்கேற்ப வட்டி, திரும்ப பெறும் வருமானம் போன்றவற்றை தேர்வு செய்யலாம். இத்திட்டமானது FD வட்டி விகிதங்களை அமல்படுத்தியது.

2. ரெகரிங் டெபாஸிட் (ஆர்.டி) : எஸ்.பி.ஐ வங்கியை பொருத்த வரை, ரெகரிங் டெபாஸிட் என்பது ஒரு நபர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிலையான தொகையை மாத வருமானம் மூலம் சேமித்து வைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஆர்.டி.எஸ் இல் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் எஃப்.டி கணக்குகள் போலவே இருக்கும்.

3. மல்டி ஆப்ஷன் டெபாஸிட் திட்டம் (எம்.ஒ.டி.எஸ்) : எஸ்.பி.ஐ-ன் இந்த திட்டம் என்பது தனித்தனி இடைவெளி வசதி கொண்ட சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஃபிக்சட் டெபாஸிட்கள் ஆகும். எப்போது வேண்டுமானாலும் முழுமையாகக் கலைக்கப்படும் சாதாரண FD போல் இல்லாமல் ஒரு MODS கணக்கிலிருந்து ரூ. 1,000 ரூபாய் முதல் நிதி தேவைக்கேற்ப பணம் எடுத்துக்கொள்ளலாம்.

4. மறு முதலீட்டு திட்டம் : எஃப்.டி-யில் இருந்து மாறுபடும் திட்டம் இது. எஸ்.பி.ஐயின் மறு முதலீட்டுத் திட்டம் முதிர்ச்சியின் போது மட்டுமே வட்டி செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மறு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கணக்கிடப்பட்டு, செலுத்தப்படும் முதன்மை மற்றும் கூட்டு வட்டிக்கு வழக்கமான வட்டி சேர்க்கப்படும்.

5. எஸ்.பி.ஐ. வரி சேமிப்பு திட்டம்: எஸ்.பி.ஐ. வரி சேமிப்பு திட்டம் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C கீழ் 1.5 லட்சம் வரை வரி சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட கணக்கு எஃப்.டி போலவே செயல்படுகிறது மற்றும் அதே வட்டி விகிதத்தை செலுத்துகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...