தங்கம் விலை:

 தங்கம் விலை:
நகை வாங்குபவர்களைக் கதற வைக்கும் விலையேற்றம்!

தங்கம் விலை உயர்வு’ என்ற செய்தியைத்தான் கடந்த ஒரு மாதமாகவே வாடிக்கையாளர்கள் தினமும் கேட்கின்றனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த வாரமும் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர் அதிருப்தியில் இருக்கின்றனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னையில் இன்று (ஜனவரி 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 38 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,862 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,824 ஆக மட்டுமே இருந்தது. அதேபோல, 30,592 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 30,896 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

தூய தங்கத்தின் விலை!
24 கேரட் தூய தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை ரூ.4,053 ஆக இருக்கிறது. நேற்று 4,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 32,424 ரூபாயிலிருந்து இன்று 32,424 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய
தங்கத்தின் விலையும் 304 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,899 ஆகவும், டெல்லியில் ரூ.3,902 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,946 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,824 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,754 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,827 ஆகவும், ஒசூரில் ரூ.3,824 ஆகவும், கேரளாவில் ரூ.3,723 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.51 ஆக இருக்கிறது. நேற்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.51,000 ஆக இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...