இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்

வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட கே-4 ஏவுகணை – கடந்த ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக சோதனை வெற்றி.

22ம் தேதி பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்யாத அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடும் எச்சரிக்கை – வரும் 28ம் தேதி மாலை 4 மணிக்குள் விளக்கம் தர உத்தரவு.வருகைப்பதிவு செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை பிப்ரவரி 2-ம் வாரத்திற்குள் முடித்து அரசாணை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் திட்டம்.

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை என்ற முடிவை திரும்பப் பெற முடியாது – பிரகாஷ் ஜவடேகர்.

தமிழகத்தில் பணிபுரியும், 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம்: மத்திய அரசு அறிவிப்பு. சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் உள்ளிட்ட 24 பேருக்கு கவுரவம்.

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில், 3 பேர் கைது: சிபிசிஐடி போலீசார் தகவல்.

பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை – தமிழக காவல்துறை இயக்குநர் எச்சரிக்கை.

குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய சிறைத்துறை காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தேர்வு வேலூர் சிறை டிஐஜி ஜெயபாரதி, திருப்பூர் மாவட்ட சிறை ஜெயிலர் தமிழ்மாறன், துணை ஜெயிலர் பேபி,கொக்கிரகுளம் துணை சிறையின் துணை ஜெயிலர் கீதா, அருப்புக்கோட்டை துணை சிறையின் காவலர் கண்ணன் உள்ளிட்டோருக்கு அறிவிப்பு.

குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்து நீக்கப்பட்ட 39 பேருக்கு பதிலாக, புதிய 39 பேரின் பெயர் பட்டியல் நாளை வெளியாகிறது.

பிரெக்சிட் – பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்; 31ம் தேதி பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது.

நடிகர் ரஜினிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற்றது திராவிடர் விடுதலைக் கழகம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...