இன்றைய நாளின் சில சிறப்பு நிகழ்வுகள்
ஹோல் பஞ்சிங்
காகித துளை கருவி எனப்படும் இது கோப்புகளில் ஆவணப் பிரதிகளைக் கட்டி வைப்பதற்காக அவற்றைத் துளையிடப் பயன்படும் பொதுவான அலுவலகக் கருவி ஆகும். இக்கருவியை முதன் முதலா கண்டறிஞ்சது பற்றி இரு விதமான காப்பி ரைட் தகவல் உ ள்ளன. ஜெர்மனியில் ஆரம்பம் முதலே காகித துளை கருவியை பயன்படுத்தி வாராங்களாம். ஆனா ஃப்ரெடிஸ் சொயேனெக்கின் (Friedrich Soennecken) தனது கண்டுபிடிப்பான Papierlocher (Locher) க்கு காப்புரிமையை இதே நவம்பர் 14, 1886, பதிவுசெஞ்சாராம்.
“இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்” துவக்கப்பட்ட தினம் இன்று.
கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்றாக சென்னை சோழிங்கநல்லூர் வட்டம் செம்மண்சேரியில் “இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்” (Indian Maritime University) துவக்கப்பட்ட தினம் இன்று. மத்திய அரசால் அமைக்கப்பட்ட கடல்சார் போக்குவரத்துத் துறை கல்வித்திட்டங்களை வழங்கும் இப்பல்கலைக்கழகத்தை தலைமையகமாகக் கொண்டு இதன் கீழ் சுமார் 21 கடல்சார் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள்
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 ஆம் ஆண்டு நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக்கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது.