“சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று”

 “சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று”

சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகளவில் இந்த நோயின் தாக்கம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல வார இதழான தி லான்சேட் ஜார்னல் ( The Lancet journal), கடந்த 30 ஆண்டுகளில் சர்க்கரை நோய் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதிகரித்து வரும் மக்கள் தொகையில் 80 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 1990ம் ஆண்டுகளில் 20 கோடியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருப்பதும், வளர்ந்த நாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இன்சுலின் குறைபாட்டினால் இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதும், இன்சுலின் உணர்திறன் இழப்பால், நடுத்தர மற்றும் வயதானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. வளர்ந்த மற்றும் ஏழை நாடுகளில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் தென்படுகிறது. இந்தியாவிலும் இந்த பாதிப்பு பெருமளவில் உள்ளது. 44 கோடி இளைஞர்கள் சர்க்கரை நோய் பாதிப்பிற்கு முறையான சிகிச்சை பெறுவதில்லை.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...