இன்றைய ராசி பலன்கள் – 17-01-2020 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
குடும்ப உறுப்பினர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகம் தொடர்பான செயல்களில் எதிர்பார்த்த பலன்களை தரும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : அபிவிருத்தி ஏற்படும்.
பரணி : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
————————————————————-
ரிஷபம் :
நண்பர்களின் ஆதரவுகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.  தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மனம் மகிழ்வீர்கள்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : பொறுமையாக செயல்படவும்.
————————————————————-
மிதுனம் :
உயர் அதிகாரிகளின் ஆதரவால் எடுத்த பணிகளை நன்முறையில் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம்  கனிவாக நடந்து கொள்ளவும். புண்ணிய காரியங்களில் கலந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் உள்ள நுணுக்கத்தை கற்றுக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : கனிவு வேண்டும்.
புனர்பூசம் : நுட்பங்களை பயில்வீர்கள்.
————————————————————-
கடகம் :
கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். பணியில் பொறுப்புகள் உயரும். புத்திரர்களால் இலாபகரமான செய்திகள் வந்தடையும். வாரிசுகளால் சுபச்செய்திகள் உண்டாகும். தொழிலில் மேற்கொண்ட புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூசம் : பொறுப்புகள் உயரும்.
ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.
————————————————————-
சிம்மம் :
இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். பணியில் செல்வாக்கு உயரும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். சபைகளில் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : செல்வாக்கு உயரும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
————————————————————-
கன்னி :
வாடிக்கையாளர்களின் வரவால் இலாபம் உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். எதிர்பாராத தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் வண்ண நிறம்
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : மகிழ்ச்சி அடைவீர்கள்.
————————————————————-
துலாம் :
புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் பொருளாதார மேன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : தனவரவு உண்டாகும்.
சுவாதி : முடிவுகள் கிடைக்கும்.
விசாகம் : சாதகமான நாள்.
————————————————————-
விருச்சிகம் :
பணி சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அனுஷம் : அமைதி வேண்டும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
————————————————————-
தனுசு :
நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாள்களாக இருந்துவந்த பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். இறைவழிபாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அங்கீகாரம் கிடைக்கும். நினைத்த செயல்கள் ஈடேறுவதில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
————————————————————-
மகரம் :
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மேன்மையான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன் உண்டாகும். குடும்ப நபர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
திருவோணம் : நம்பிக்கை மேம்படும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.
————————————————————-
கும்பம் :
புதிய முயற்சிகளின் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். வாகனம் தொடர்பான தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : நற்பெயர்கள் உண்டாகும்.
சதயம் : மனம் மகிழ்வீர்கள்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
————————————————————-
மீனம் :
பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அமைதியுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் சுபவிரயம் ஏற்படும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் கவனத்துடன் பேசவும். முடிவுகளில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அமைதியுடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : சுபவிரயம் உண்டாகும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.
————————————————————-
         – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...