வரலாற்றில் இன்று (27.10.2024 )

 வரலாற்றில் இன்று (27.10.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 27 (October 27) கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

939 – முதலாம் எட்மண்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.
1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.
1795 – ஸ்பானியக் குடியேற்றநாடுகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டது.
1806 – பிரெஞ்சுப் படையினர் பேர்லின் நகரினுள் நுழைந்தனர்.
1807 – பிரெஞ்சு-ஸ்பானியப் படைகள் போர்த்துக்கலைக் கைப்பற்றின.
1810 – ஐக்கிய அமெரிக்கா முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான மேற்கு புளோரிடாவை இணைத்துக் கொண்டது.
1867 – கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.
1870 – 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்ஸ் நகரில் இடம்பெற்ற போரில் பிரஷ்யாவிடம் சரணடைந்தனர்.
1891 – ஜப்பானில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 7000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1904 – முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.
1924 – உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
1953 – தெற்கு அவுஸ்திரேலியாவில் ஈமியூ ஃபீல்ட் என்ற இடத்தில் டோட்டெம் 2 என்ற பிரித்தானிய அணுவாயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
1958 – பாகிஸ்தான் முதலாவது சனாதிபதி இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு ஜெனரல் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1961 – நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
1961 – மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன.
1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: ஐக்கிய அமெரிக்காவின் U-2 விமானம் ஒன்று கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1971 – கொங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1979 – செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1981 – சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் U 137 சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.
1982 – யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.
1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
1991 – துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1991 – போலந்தில் 1936ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெற்றன.
1999 – ஆர்மீனியாவில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – பாரிசில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.
2007 – கொங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1728 – ஜேம்ஸ் குக், பிரித்தானியாவின் கடற்படைக் கப்டன், நாடுகாண் பயணி (இ. 1779)
1782 – நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1840)
1858 – தியொடோர் ரோசவெல்ட், 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1919)
1877 – ஜார்ஜ் தாம்சன், ஆங்கிலேயெத் துடுப்பாட்டக் காரர் (இ. 1943)
1920 – கே. ஆர். நாராயணன், இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் (இ. 2005)
1932 – சில்வியா பிளாத், அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)
1945 – லுலா ட சில்வா, பிரேசில் அரசுத் தலைவர்
1977 – குமார் சங்கக்கார, இலங்கையின் துடுப்பாளர்
1984 – இர்பான் பதான், இந்தியத் துடுப்பாளர்

இறப்புகள்

1605 – அக்பர், முகலாய மன்னன் (பி. 1542)
1845 – சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1785)
1980 – ஜோன் விளெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1899)
1992 – டேவிட் போம், அமெரிக்க இயற்பியலாளர், தத்துவவியலாளர் (பி. 1917)
2009 – டேவிட் செப்பர்ட், ஆங்கிலேய துடுப்பாட்ட நடுவர் (பி. 1940)

                               சிறப்பு நாள்

செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் – விடுதலை நாள் (1979)
துருக்மெனிஸ்தான் – விடுதலை நாள் (1991)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...