இன்றைய ராசி பலன்கள் – 08-01-2020 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்துசேரும். தொழிலுக்கு தேவையான புதிய உபகரணங்களை வாங்குவதற்கான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் கவலைகள்  உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : கவலைகள் உண்டாகும்.
——————————————————–
ரிஷபம் :
திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : செல்வாக்கு உயரும்.
——————————————————–
மிதுனம் :
உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். திறமைகளின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : நலம் உண்டாகும்.
திருவாதிரை : அன்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
——————————————————–
கடகம் :
தொழில் சம்பந்தமான இடமாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளால் தொழிலில் இலாபம் உண்டாகும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்துகொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : இடமாற்றம் ஏற்படும்.
பூசம் : இலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
——————————————————–
சிம்மம் :
இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். தந்தையின் ஆதரவால் சுபகாரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். போக்குவரத்தால் சுபமான இலாபம் கிடைக்கும். எடுத்த பணிகளில் செய்யும் விதத்தால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : சுபகாரியங்கள் கைகூடும்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
——————————————————–
கன்னி :
உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.  தொழில் சார்ந்த முடிவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கடிதத்தின் மூலம் அனுகூலமான நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
——————————————————–
துலாம் : 
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் தொழில் சார்ந்த முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
சித்திரை : அன்பு அதிகரிக்கும்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : முன்னுரிமை கிடைக்கும்.
——————————————————–
விருச்சிகம் :
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். பிறருக்கு ஜாமீன் கையெழுத்து இடுவதில் கவனத்துடன் இருக்கவும். கடன்காரர்களால் மனவருத்தங்கள் ஏற்படும். பங்காளிகளிடத்தில் பொறுமை காத்தல் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : வருத்தங்கள் ஏற்படலாம்.
கேட்டை : பொறுமை வேண்டும்.
——————————————————–
தனுசு :
எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். மனைவியால் சுபவிரயம் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளியூர் வேலை வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கற்ற சில சூட்சமங்களால் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : சுபவிரயம் ஏற்படும்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
——————————————————–
மகரம் :
எதிர்பாராத செலவுகள் நேரிடும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : புகழ் உண்டாகும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : முடிவுகள் சாதகமாகும்.
——————————————————–
கும்பம் :
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தொழிலில் வேலையாட்களால் கவலைகள் உண்டாகும். எதிர்பார்த்த வியாபாரம் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
——————————————————–
மீனம் :
அரசு அதிகாரிகளுக்கு இடையேயான நட்பில் நம்பிக்கை உண்டாகும். பேச்சுத் திறமையால் புகழப்படுவீர்கள். கால்நடை வியாபாரிகளுக்கு தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : நம்பிக்கை உண்டாகும்.
உத்திரட்டாதி : புகழப்படுவீர்கள்.
ரேவதி : இலாபம் உண்டாகும்.
——————————————————–
– ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...