தேர்தல் செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை  நடக்கிறது.முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள் பதிவானது.இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவு.ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது.வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது?! வாக்கு பதிவு பெட்டியில் உள்ள வாக்குச் சீட்டுகள் முழுமையாக கொட்டப்படும். 4 வண்ணங்களில் உள்ள வாக்குச் சீட்டுகள் தனிதனியாக பிரிக்கப்படும். வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் ஐம்பது ஐம்பதாக கட்டுகள் (Bundle)  அமைக்கப்படும். அதன்பிறகு வாக்காளர் பட்டியல், வாக்கு பதிவு செய்தோர் பட்டியல் சரிபார்க்கப்படும். அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், அதற்கான RO கடிதம் அளிப்பார் அதன்பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை சுமார் ஒரு மணி நேரம் தாமதம். வாக்கு எண்ணிக்கை மையங்களில் எந்த அறைக்கு செல்வது ? வாக்கு சீட்டுகளை பிரிப்பது ? அவற்றை எப்படி எண்ணுவது என்று முறையாக பணியாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் பல எண்ணிக்கை மையங்களில் பணியாளர்கள் திணறல், தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதம்! நாகை மாவட்டம் முட்டம் 1-வது பகுதியில் seal வைக்கபட்ட வாக்கு பெட்டியில் முகவர்கள் கையெழுத்து இல்லாததால் குளறுபடி. வாக்கு பெட்டியை திறக்க கூடாது என பல்வேறு கட்சி முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதம்.
பூட்டை சுத்தியலால் உடைத்து வாக்குப்பெட்டி திறப்பு அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் தபால் ஓட்டுப்பெட்டி சாவி தொலைந்ததால் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் அனுமதியோடு தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இராஜபாளையத்தில் குளறுபடிஇராஜபாளையத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு சீட்டை பிரிக்கும் இடங்களில் காட்சி பதிவு செய்ய செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

கோவை, சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம். வாக்குப்பெட்டி சீல் வைக்கப்படாமல் இருந்ததால், வாக்குகளை எண்ண எதிர்ப்பு. நாமக்கல்லில் 17 மாவட்ட கவுன்சிலர், 172 ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் – திமுக முன்னிலை. பொன்னேரியில் அனுமதிச் சீட்டு மாற்றி வழங்கப்பட்டதால் தள்ளுமுள்ளு. பழைய அனுமதிச் சீட்டில் முறைகேடு என திமுக புகாரின் பேரில் புதிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. அனுமதிச் சீட்டை பெற முகவர்கள், வேட்பாளர்களிடையே தள்ளுமுள்ளு திருப்பூர், அவினாசியில் வாக்கு எண்ணும் பணி தாமதம். புதுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டில் குளறுபடி.மதுரையில் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வர தாமதம். பழனியில் முகவர்கள் வராததால், வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை முன்பு அதிகாரிகள் காத்திருப்பு. திண்டுக்கல்லில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் – அதிகாரிகளிடம் திமுகவினர் முறையீடு.

வாக்குப்பெட்டியில் துண்டு துண்டாக கிடந்த வாக்குச்சீட்டுகள்.வாக்களித்த சின்னத்தை மட்டும் கிழித்து வாக்குப்பெட்டியில் பதிவு.திண்டுக்கல் சீலப்பாடி செட்டிநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து வாக்குப்பெட்டிகளை எண்ணும் போது அதிகாரிகள் அதிர்ச்சி.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – தமிழகம்.பெரும்பாலான வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை! அடுத்த இடத்தில் அதிமுக கூட்டணி உள்ளது. வெகு சில இடங்களில் அமமுக முன்னிலை! ஒரு வார்டில் கூட நாம் தமிழர் வேட்பாளர்கள் முன்னிலை பெறவில்லை.சுயேட்சை வேட்பாளர்கள் சில பகுதிகளில் முன்னிலை.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

அதிமுக எம்எல்ஏ கணவர் தோல்வி, மண்ணச்சநல்லூர் தொகுதி வலையூர் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி.இவரை எதிர்த்து பேட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீதர் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!