ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏதேனும் பிரச்சினை எனில் 1512 என்ற எண்ணில் இருப்புபாதை காவல் நிலையங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் – திருச்சி ரயில்வே காவல் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேட்டி.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ரூ.29,904க்கு விற்பனை.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம் வழங்க வேண்டும்.தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; தமிழகத்தில் இதுவரை 1.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற பினராயி விஜயன் வலியுறுத்தல்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து. வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திடுவோம் – முதலமைச்சர்
10ம் வகுப்பு தேர்வை பழையபாடத்தில் எழுத விண்ணப்பிக்கலாம்: தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தல்
திருச்சி வங்கி கொள்ளையில் போலீசாருக்கு ரூ.20 லட்சம் பணம்.பஞ்சாப் நேசனல் வங்கி கொள்ளையில் கைதான முருகன் பகீர் வாக்குமூலம். சென்னை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு ஜோசப் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாக தகவல். ஜன.3க்குள் இருவரும் ஆஜராகுமாறு சம்மன்.
புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாகம்.
5ஜி அலைக்கற்றைக்கான சோதனைகள் கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், 2020 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.27 மாவட்டங்களில் 255 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும், 4,924 ஊராட்சிகளுக்கும், 38,916 ஊராட்சி வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.2 கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2ம் தேதி எண்ணப்படுகின்றன.
உள்ளாட்சித் தேர்தல் வன்முறை – ஒருவர் பலி.ஒட்டப்பிடாரத்தில் அரிவாள் வெட்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு – 2 பேர் படுகாயம்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு – பள்ளிக்கல்வித் துறை.3ம் தேதி திறக்கப்படும் என்று இருந்த நிலையில் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு.வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால் அரசு நடவடிக்கை.
பொங்கல் பரிசுத் தொகுப்பு, ஜனவரி 9ம் தேதி முதல் வழங்கப்படும் – தமிழக அரசு. 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை வழங்க திட்டம். விடுபட்டவர்களுக்கு 13ம் தேதி வழங்கப்படும் – தமிழக அரசு.