வரலாற்றில் இன்று (03.09.2024 )

 வரலாற்றில் இன்று (03.09.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 3 (September 3) கிரிகோரியன் ஆண்டின் 246 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 247 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 119 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

301 – உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது.
1189 – முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1260 – பாலஸ்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும்.
1783 – அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது. பாரிசில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா பிரித்தானியாவிடம் இருந்து அதிகாரபூர்வமாக விடுதலை அடைந்தது.
1798 – பெலீசின் கரையில் ஸ்பானியர்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஒருவாரப் போர் இடம்பெற்றது.
1801 – இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1855 – நெப்ராஸ்காவில் அமெரிக்கப் படையினர் சியூ பழங்குடியினரைத் தாக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பேரைக் கொன்றனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் கென்டக்கி மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
1878 – தேம்ஸ் நதியில் “பிரின்சஸ் அலைஸ்” பயணிகள் கப்பல் பைவெல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1914 – அல்பேனிய இளவரசன் வில்லியம் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினான்.
1933 – சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை (7495 மீ) யெவ்கேனி அப்லாக்கொவ் எட்டினார்.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான ஜெர்மனியின் முற்றுகையை அடுத்து பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன ஜெர்மனி மீது போர் தொடுத்தன.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன.
1971 – கட்டார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.
2004 – ரஷ்யாவில் பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 344 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1814 – ஜேம்ஸ் சில்வெஸ்டர், பிரித்தானிய கணிதவியலாளர்
1829 – அடோல்ஃப் ஃபிக், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 1901)
1948 – லெவி முவனவாசா, சாம்பியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2008)
1951 – மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசியல்வாதி, 6வது அரசுத்தலைவர்
1976 – விவேக் ஒபரோய், இந்தித் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1658 – ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (பி 1599)
1999 – அப்துல் காதர் சாவுல் அமீட், இலங்கை அரசியல்வாதி (பி. 1928)
1999 – இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (பி. 1930)
2014 – ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (பி. 1930)

சிறப்பு நாள்

கட்டார் – விடுதலை நாள் (1971)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...