வரலாற்றில் இன்று (28.08.2024 )

 வரலாற்றில் இன்று (28.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஆகஸ்டு 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1349 – கொள்ளை நோயைக் காரணம் காட்டி ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1511 – போர்த்துக்கீசர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர்.
1521 – ஒட்டோமான் துருக்கியர் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினர்.
1619 – ஜெர்மனியின் இரண்டாம் பேர்டினண்ட் புனித ரோமப் பேரரசன் ஆனான்.
1789 – வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.
1844 – பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
1849 – ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிஸ் நகரம் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.
1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைப் பிடித்தது.
1879 – சூளுக்களின் கடைசி மன்னன் செட்ஸ்வாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
1898 – காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
1913 – நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
1916 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனி, ருமேனியா மீதும், இத்தாலி ஜெர்மனி மீதும் போரை அறிவித்தன.
1922 – ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்கச் சம்மதித்தது.
1924 – சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1931 – பிரான்சும், சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1943 – நாசி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
1963 – மார்ட்டின் லூதர் கிங், 200,000 பேருடன் ‘என் கனவு யாதெனில்…’ என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
1964 – பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பித்தது.
1979 – ஐ.ஆர்.ஏயின் குண்டு ஒன்று பிரசல்சில் வெடித்தது.
1988 – ஜெர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
1991 – சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது.
1991 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகினார்.
1996 – வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
2006 – திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006 – இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

பிறப்புகள்

1749 – ஜொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, ஜெர்மனிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1832)
1828 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (இ. 1910)
1855 – ஸ்ரீ நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
1863 – அய்யன்காளி, தலித் தலைவர் (இ. 1914)
1957 – ஈவோ யொசிப்போவிச், குரோவாசியா அரசியல்வாதி
1965 – ஷானியா ட்வைன், கனடிய நாட்டுப்புற பாப் பாடகர்
1983 – லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர்

இறப்புகள்

430 – புனித அகஸ்டீன், மெய்யியலாளர் (பி. 354)
1891 – ராபர்ட் கால்டுவெல், பிரித்தானியத் தமிழறிஞர் (பி. 1814)
1973 – முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)

சிறப்பு நாள்

புனித அகஸ்டீன் கிருத்தவத் திருவிழா

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...