தமிழ் சினிமா: ‘கதாநாயகர்கள் அரசியல் வசனத்தால் எங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது
மார்ச் 1, 2020 முதல் திரையரங்குகள் மூடப்படும் என கோவையில் நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு திரையரங்குகளுக்கு விதிக்கும் 8% கேளிக்கை வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும், முன்னனி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைந்தால், அந்த நடிகர்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் குறைந்த சம்பளத்தில் மீண்டும் அதே தயாரிப்பாளருக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், திருப்பூர் சுப்பிரமணியம், ”மார்ச் 1ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது, இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்பதை உணர்த்துவதற்காகத்தான்,” என்றார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு எனக் கூறி அமல்படுத்தப்பட்ட 28% ஜி.எஸ்.டி வரியோடு மாநில அரசின் 8% வரியையும் செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் ஏற்கனவே பல திரையரங்குகள் மூடப்பட்டு, எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசின் வரியை ரத்து செய்ய வேண்டும், என பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை,” என பிபிசி தமிழின் மு.ஹரிஹரனிடம் கூறினார் திருப்பூர் சுப்பிரமணியம்.படம் வெளியாகி 100 நாட்களுக்குள் ஆன்லைன் டிஜிட்டல் தளங்களில் தயாரிப்பாளர் படத்தை வெளியிடக்கூடாது என்கிற கோரிக்கையும் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.
Tags: திருமால் பரமன்