இன்றைய முக்கிய செய்திகள்
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு.
உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது! தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.
ஒன்பது ஆண்டுகளுக்கு, பிறகு தமிழகத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல். 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்.
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. தண்டனை விவரம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு. கோவை பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்பு.
முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், காலை 9 மணி நிலவரப்படி 10.4% வாக்குகள் பதிவு – மாநில தேர்தல் ஆணையம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி விருதுநகர் – 8.52%, திண்டுக்கல் – 5.6%, திருப்பூர் – 8.58%, திருச்சி – 16%, தருமபுரி – 10%, கரூர் – 14.48%, நாகை – 9.21%, மதுரை – 8%, திருவாரூர் – 12. 84%, தூத்துக்குடி -9.80% வாக்குகள் பதிவு.
ஈரானில் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில், 5.1 ஆக பதிவு.
திருவள்ளூர், ஈக்காடு பகுதியில் கள்ள ஓட்டு புகார் காரணமாக தேர்தல் நிறுத்தம். வாக்கு சீட்டுகளை தூக்கி எறிந்து, போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு. வாக்குச்சாவடி முன்பு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
கஜகஸ்தான் விமானம் விபத்து: 100 பேரின் நிலை என்ன? 100 பயணிகளுடன் சென்ற விமானம் கஜகஸ்தானின் அல்மட்டி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ரூ.29,680-க்கு விற்பனை
ரஷ்யாவின் உதவியுடன், கூடங்குளம் அணுமின் உலை வளாகத்தில், அடுத்து 2 உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. -தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அவ்தீவ் பேட்டி. அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் 12 மின்னுற்பத்தி திட்டங்களை அமைக்கவும் இலக்கு நிர்ணயம் – அவ்தீப்.
கோவை: பன்னிமடையில், 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை. தூக்கு தண்டனை விதித்து கோவை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.