பேசும் புத்தகங்கள் /கானுறு மலர்/ புத்தக விமர்சனம்
பேசும் புத்தகங்கள்
கானுறு மலர்
புத்தக விமர்சனம்
நான் படித்த புத்தகம் இந்த சிறுகதைத் தொகுப்பு.
எழுத்தாளர், சவிதா
வெளியிடு ,
எழுத்து பிரசுரம் ( ஜீரோ டிகிரி பதிப்பகம் )
எண் 55 (7) , ஆர் பிளாக் பிளாக் ஆறாவது அவென்யூ ,
அண்ணாநகர் 600 040- தொலை பேசி. :89250 61999
விலை ரூபாய் 160 , 134 பக்கங்கள்
———————-
இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினொரு சிறுகதைகள், எழுத்தாளர் தெரிவித்தபடி பல கதைகள் முன்னணி இதழ்களில் வெளி வந்திருக்கின்றன,,
ஏறக்குறைய எல்லா கதையிலும் அவரின் சொந்த அனுபவங்கள் போல உணர முடிகிறது ,சொந்த கதைகளை அவர் சிறு கதைளாக மாற்றியிருக்கக்லுகூடும், கதைகளின் தலைப்புகள் வித்யாசமாக இருக்கின்றன,
பல தலைப்புகளின் அர்த்தம் இலக்கியம் படித்த வாசகர்களுக்கு தான் தெரியலாம்,
சாதரண வாசகர்கள் அர்த்தம் என்ன வென்று சிரமப்படலாம்,
சில கதைகளை தவிர மற்ற கதைகளை ஆரம்ப வரிகளில் கதையின் போக்கை உணர முடியவில்லை ,இரண்டு அல்லது மூன்று பக்கங்கள் படித்த பின்பு தான் அந்த கதையின் போக்குடன் ஒட்ட முடிகிறது,
மற்றபடி அனைத்து கதைகளிலும் ஜீவன் உள்ளது, கதைகளின் கடைசி வரிகளில் சுஜாதா போல நச் ன்னு முடித்திருக்கின்றார்,,
கதைளில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது, அதற்காக ஆசிரியர் தன்னை சமரசம் செய்து கொள்ளவில்லை மொழி இயல்பாக இருக்கிறது,
படிக்க சரளமாக ,வேகமாக நகர்கிறது,
அனைத்து கதைகளில் ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணின் போராட்டமும் அவள் அதிலிலிருந்து மீண்டு வர முடியுமா என்ற கேள்விகளும் ,வரலாம் என்ற பதில்களும் இருக்கின்றன,
ஆனால் இன்றைய சமூகம் நிகழ்த்தும் அனைத்து வன்முறைகளில் அவள் தப்பிக்க முடியுமா தாங்கிக் கொள்ளத்தான் முடியுமா போன்ற கேள்விகள் ,
இப்படிப்பட்ட இந்த கட்டுப்பாட்டுகளினால் அவள் தன்னை அழித்துக் கொள்ள வேண்டும் அ ல்லது போராட்ட வழிகளில் தன்னை வேகமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் சொல்கிறது,
இந்த கால சூழ்நிலைக்கு இப்படிப்பட்ட கதைகள் வர வேண்டியது நியாயமானது பருவங்களில் ஏற்படும் எதிர்பார்ப்புகள், சுயத்தன்மை இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது அதற்கான உரையாடல் கதை சம்பவங்கள் மிக நேர்த்தி ,
இப்படிப்பட்ட கதைகள் இன்றைய சமூகத்துக்கு மிகவும் அவசியம் அனைத்துப் பெண்களும் இக்கதைகளை வாசிக்கவேண்டும் ,
இனி கதைகள் பற்றி
கானுறு மலர்- மஞ்சுளாவின் நிலை அந்த கடைசி வரையில் சொல்கிறது கொலுசை நான் வந்தா கழட்டிடு ,செல்வி உன்னிப்பாக கவனிச்சு கேட்குது , சரியா
நெகிழ் பூவில் – வேறு மஞ் இன்றைய விஞ்ஞானம் ,சுஜாதா படித்திருந்தால் அசந்திருப்பார் நானே எதிர்பார்க்கவில்லை .
உசாத்துணையில் இன்றைய இளைஞர்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்ள முடியாத மனநிலை அதனை ஒரு பெண் தான் மாற்ற முடியும் என சொல்கிறது, நதி மனதை அள்ளுகிறான்.
ஆழாக்கு முருகன்- கவருகிறான், அவனின் ஃப்ளாஷ் பாக் கதை நெகிழ வைக்கிறது ,வாழ்க்கையின் வித்தியாசமான அனைத்து படிமங்களும் புரிகிறது.
நெருங்கத் தொடுத்தது- கடைசி வரியில் அந்த அக்கா ,வெண்ணிலாவை மிஞ்ச சுயநலம்தான் எங்கும் .
உவக்கு நாள் ஆயினும்- கீர்த்து தெளிவானவள் கவருகிறார்.
சொப்பு சாமான் -புஷ்பா அக்கா இன்றைய சமூகநிலையின் மாற்றத்துக்குரியவர் ,மாறாத பழைய சமூக மாற்றம் பற்றி சொல்கிறாள்.
ஆசை முகம் மறந்து பேச்சு- மீனு இன்றைய நடைமுறைப் பெண் இன்னும் தெளிவில்லை ,உருவங்கள் தான் நிஜம் என்பதை இன்னும் நம்பிக்கொண்டிருக்கிற சமூக பெண்.
திரள் கனி – எனக்கு மிகவும் பிடித்த கதை ,எல்லா பாத்திரங்களும் எதார்த்தம் ,இளம் வயது பெண்ணின் மன நிலை, செல்வி,தெய்வானை ,ககை நாயகி கவர்கிறார்கள். அந்த கடைசி வரி அம்மாவையிட பெரியவளாய் இருந்தேன் , சமூக மாற்றம் நிச்சயம்.
சமயோசிதம் – நடேசன் அனுபவசாலி ஆகிறான்.
அடுத்து என்ன கவர்ந்த கதை நெறிக்கட்டி
நிரஞ்சனாவைப்போல ஒரு பெண் இருக்க வேண்டும் ,எதையும் நேரிடையாக எதிர் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை இருக்க வேண்டும்.
அனைத்துக் கதைகளும் ஒரு சமூகம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றன.
இன்றைய பெண்களின் தினசரி அவலம் சொல்லப்பட்டிருக்கிறது . அவர்கள் அந்த அவலத்தில் இருந்து மீளுவார்களா என்ற கேள்வியும் அதற்கான விடை மாற வேண்டிய சமூகமும் மாற்றத்திற்கு பெண்ணின் தைரியமும் தான் என்பதை தெளிவுப்படுத்தியிருக்கின்றன .
–-உமாகாந்த்,