வரலாற்றில் இன்று (25.07.2024)

 வரலாற்றில் இன்று (25.07.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூலை 25 (July 25) கிரிகோரியன் ஆண்டின் 206 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 207 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 159 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1261 – கொன்ஸ்டன்டீனபோல் நகரை நிக்காயர்கள் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர்.
1547 – இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினான்.
1593 – பிரான்சின் நான்காம் ஹென்றி புரட்டஸ்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினான்.
1603 – ஸ்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்தானியாவின் முதலாவது மன்னனாக முடி சூடினான்.
1799 – எகிப்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 ஒட்டோமான்களை சமரில் வென்றான்.
1868 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1894 – முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.
1898 – புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்பு ஆரம்பமானது. முதலாவது அமெரிக்கப் படையினர் குவானிக்கா துறைமுகத்தில் தரையிறங்கினர்.
1907 – கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் வந்தது.
1908 – அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.
1925 – சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது.
1934 – ஆஸ்திரிய அதிபர் எங்கல்பேர்ட் டொல்ஃபஸ் நாசிகளினால் கொலை செய்யப்பட்டார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் இடம்பெற்ற நோர்மண்டி சண்டையில் 5,021 கனேடியர்கள் கொல்லப்பட்டனர்.
1973 – சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.
1983 – கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 – சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற ரஷ்யாவின் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1993 – இஸ்ரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது.
1993 – மண்கிண்டிமலை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.
1993 – தென்னாபிரிக்காவில் சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் 11 மதகுருக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
1994 – இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையில் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948ம் ஆண்டு முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.
1997 – கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும்.
2000 – பிரான்சின் கொன்கோர்ட் சுப்பர்சோனிக் விமானம் பாரிசில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்லப்பட்டனர்.
2007 – பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

பிறப்புகள்

1875 – ஜிம் கார்பெட், புலி வேட்டைக்காரர் (இ. 1955)

இறப்புகள்

1980 – விளாடிமீர் விசோத்ஸ்கி, ரஷ்யப் பாடகர், கவிஞர், நடிகர் (பி. 1938)

சிறப்பு நாள்

புவேர்ட்டோ ரிக்கோ – அரசியலமைப்பு நாள் (1952)
துனீசியா – குடியரசு நாள் (1957)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...