யூ ட்யூப் மியூசிக் அறிமுகப்படுத்தும் மூன்று புதிய பிளேலிஸ்ட்கள்!
யூ ட்யூப் மியூசிக் முதல்முறையாக தனிப்பட்ட பிளேலிஸ்ட்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது :
இந்தியாவில் யூ ட்யூப் மியூசிக் சேவை கடந்த மார்ச் மாதம் அறிமுகமானது. இதில் அனைத்து மொழியிலான அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆல்பங்கள், மியூசிக் வீடியோக்கள், சில நேரலை நிகழ்வுகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. முழுவதும் இலவசமாகவே பிளே ஸ்டோரில் இந்த செயலியை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
அவ்வப்போது புதுமையை புகுத்தி வரும் யூ ட்யூப், ‘டிஸ்கவர் மிக்ஸ்’, ‘நியூ ரிலீஸ் மிக்ஸ்’ மற்றும் ‘யுவர் மிக்ஸ்’ என்ற மூன்று பிளேலிஸ்ட்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக நீங்கள் விரும்பும் பாடல்களை மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். அதிகமான பயனர்கள் இதனை எளிதாக, அவர்களது வசதிக்கேற்ப உபயோகிக்கும் பொருட்டு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஸ்கவர் மிக்ஸ் ஒவ்வொரு வாரமும் 50 பாடல்களை வழங்கும். வாரத்திற்கு ஒருமுறை இதனை புதுப்பித்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு புதன்கிழமையும் டிஸ்கவர் மிக்ஸ் புதுப்பிக்கப்படும்.
அதேபோன்று, ‘நியூ ரிலீஸ் மிக்ஸ்’-இல் பெரும்பாலான புதிய பாடல்கள் வெள்ளிக்கிழமை அன்று பட்டியலில் சேர்க்கப்படும்.
மூன்றாவது பிளேலிஸ்ட்டான ‘யுவர் மிக்ஸ்’, பயனர்கள் தாங்கள் விரும்பும் நடிகர்கள் அல்லது விரும்பும் இசையமைப்பாளர்களின் பாடல்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
மூன்று பிளேலிஸ்ட்களையும் யூ ட்யூப் மியூசிக் தளத்தில் ‘மிக்ஸ்டு பார் யு’ என்ற பிரிவின் கீழ் காணலாம். புரவுஸர், iOS மற்றும் Android மொபைல்களில் பிளே ஸ்டோரில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.