எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது
நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாடமி நிறுவனத்தால் 1955-ம் ஆண்டில் இருந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழில், நடப்பு ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருதுக்கு எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சூல் என்ற நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் எழுதுகிறார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள உருளைகுடி பகுதியைச் சார்ந்தவர். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை சோ.தர்மன் எழுதியுள்ளார். “கூகை” என்ற நாவலுக்காக ஏற்கனவே தமிழக அரசின் விருதை தர்மன் பெற்றிருக்கிறார்.