வரலாற்றில் இன்று (09.07.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூலை 9 (July 9) கிரிகோரியன் ஆண்டின் 190 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 191 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 175 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

455 – இராணுவத் தளபதி அவிட்டசு மேற்கு ரோமப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
869 – சப்பானில் வடக்கு ஒன்சூ அருகே செண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது.
1401 – தைமூர் ஜலாய்ரித் சுல்தானகத்தைத் தாக்கி பக்தாதை அழித்தார்.
1540 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி தனது நான்காவது மனைவி ஆன் உடனான திருமண உறவை சட்டபூர்வமாகத் துண்டித்தார்.
1755 – பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பழங்குடிப் படையினர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1790 – பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படயினர் உருசியக் கப்பல்களை பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றினர்.
1807 – பிரான்சின் முதலாம் நெப்போலியனும் உருசியாவின் முதலாம் அலெக்சாந்தரும் தில்சித் நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1810 – ஒல்லாந்து இராச்சியத்தை நெப்போலியன் தனது முதலாம் பிரஞ்சு பேரரசுடன் இணைத்துக் கொண்டான்.
1816 – அர்கெந்தீனா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1821 – கிரேக்க விடுதலைப் போரில் உதவியமைக்காக பேராயர் கிப்பிரியானொசு உட்பட 470 முக்கிய சைப்பிரசினர் தூக்கிலிடப்பட்டனர்.
1837 – பிரித்தானிய இலங்கை, சட்டவாக்கப் பேரவையில் முதல் தடவையாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.[1]
1850 – பாரசீக இறைவாக்கினர் பாப் தப்ரீசு நகரில் தூக்கிலிடப்பட்டார்.
1868 – அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1875 – உதுமானியரின் ஆட்சிக்கு எதிரான எர்சகோவினா கிளர்ச்சி ஆரம்பமானது. இது மூன்று ஆன்டுகள் நீடித்தது.
1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின.
1900 – ஆத்திரேலியக் கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆத்திரேலியக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.
1900 – வெளிநாட்டு கிறித்தவ மதப்பரப்புனர்கள் 45 பேரைத் தூக்கிலிட வடக்கு சீனாவின் சான்சி மாகாண ஆளுநர் உத்தரவிட்டார்.
1903 – யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் அமைப்பு உருவானது.[2]
1918 – அமெரிக்காவின் நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 101 பேர் உயிரிழந்தனர், 171 பேர் படுகாயமடைந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தன.
1948 – பாக்கித்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.
1955 – ரசல்-ஐன்ஸ்டைன் கொள்கை விளக்க அறிக்கை அணுவாயுதங்களினால் ஏற்படும் அழிவுகளைக் குறைக்கக் கோரியது.
1956 – யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், பெருமாள் கோயில் ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன.[3]
1956 – கிரேக்கத்தில் சைக்கிளேடு தீவுகளில் 7.7 அளவு நிலநடுக்கமும், ஏஜியன் கடலில் ஆழிப்பேரலையும் ஏற்பட்டதில் 53 பேர் உயிரிழந்தனர்.
1982 – அமெரிக்காவின் பான் ஆம் விமானம் லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 145 பேரும் தரையில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.
1986 – நியூசிலாந்தில் ஒருபாலுறவு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
1991 – 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1995 – யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
1995 – யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2002 – ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.
2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.
2006 – 2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
2006 – அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.
2011 – தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்து தனி நாடானது.

பிறப்புகள்

1819 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (இ. 1867)
1845 – ஜார்ஜ் ஓவார்டு டார்வின், ஆங்கிலேய வழக்கறிஞர், வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1912)
1858 – பிராண்ஸ் போவாஸ், செருமானிய-அமெரிக்க மானுடவியலாளர், மொழியியலாளர் (இ. 1942)
1866 – பனகல் அரசர், இந்திய அரசியல்வாதி (இ. 1928)
1893 – பி. வி. செரியன், இந்திய மருத்துவர், அரசியல்வாதி (இ. 1969)
1923 – ரேமண்ட் ஆல்ச்சின், பிரித்தானியத் தொல்லியலாளர் (இ. 2010)
1925 – குரு தத், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1964)
1927 – ஜே. சி. டேனியல், இந்திய இயற்கையியலாளர் (இ. 2011)
1930 – கே. பாலசந்தர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2014)
1933 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)
1938 – சஞ்சீவ் குமார், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 1985)
1943 – நாஞ்சில் நாரண. தொல்காப்பியன், தமிழக எழுத்தாளர்
1945 – உ. ரா. வரதராசன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2010)
1947 – ஓ. ஜே. சிம்சன், அமெரிக்க நடிகர்
1950 – விக்டர் யானுக்கோவிச், உக்ரைனின் 4வது அரசுத்தலைவர்
1953 – உடப்பூர் வீரசொக்கன், ஈழத்து எழுத்தாளர்
1956 – டொம் ஹாங்க்ஸ், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1966 – பி. உன்னிகிருஷ்ணன், இந்தியத் திரைப்பட, கருநாடக இசைப் பாடகர்
1970 – அனுராதா ஸ்ரீராம், தென்னிந்தியப் பாடகி
1992 – டக்ளஸ் பூத், ஆங்கிலேய நடிகர்

இறப்புகள்

1746 – எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு (பி. 1683)
1850 – சக்கரி தைலர், அமெரிக்காவின் 12வது அரசுத்தலைவர் (பி. 1784)
1856 – அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர் (பி. 1776)
1909 – ரிப்பன் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி (பி. 1827)
1922 – அலன் ஆபிரகாம், இலங்கைத் தமிழ்க் கல்விமான், வானியலாளர் (பி. 1865)
1965 – லூயி ஹெரால்டு கிரே, பிரித்தானிய இயற்பிலாளர் (பி. 1905)
1977 – மகாதேவன் சதாசிவம், இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1915)
1980 – வினிசியசு டி மோரேசு, பிரேசில் கவிஞர், இசையமைப்பாளர் (பி. 1913)
1997 – சி. ராமசாமி, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1905)
1997 – பி. எஸ். சீனிவாசன், கேரள அரசியல்வாதி (பி. 1923)
2005 – ம. க. அ. அந்தனிசில், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி
2009 – சி. ஆர். கண்ணன், தமிழக எழுத்தாளர்

சிறப்பு நாள்

மர நாள் (கம்போடியா)
அரசியலமைப்பு நாள் (ஆத்திரேலியா, பலாவு)
விடுதலை நாள் (அர்கெந்தீனா)
விடுதலை நாள் (தெற்கு சூடான், சூடானிடம் இருந்து 2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!