இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 09 செவ்வாய்க்கிழமை 2024 )
தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூலை 09-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
குரோதி வருடம் ஆனி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 09.07.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.59 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று காலை 09.09 வரை ஆயில்யம் .பின்னர் மகம்.பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷ ராசி அன்பர்களே!
படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப திட்டமிடுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைச் சரி செய்வீர்கள். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களோடு இணக்கமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பிரச்சனைக்காக மனம் வருந்துவீர்கள். குடும்பத்தினர் வருத்தம் அடையக் கூடாது என பாடுபடுவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே!
நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை நிச்சயமாக வாங்குவீர்கள். அடுத்துக் கெடுக்க நினைப்பவர்களை கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள். வேலை இடத்தில் இருந்த பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தாண்டுவீர்கள். உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வீர்கள்.
மிதுன ராசி அன்பர்களே!
பொதுச் சேவைகள் மூலமாக புகழடைவீர்கள். ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பணி நிமித்தமான பயணங்களில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். டீக்கடை வியாபாரத்தை சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். பெட்டிக்கடை வியாபாரிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள் மாணவர்கள் அக்கறையுடன் படித்து சாதனை படைப்பீர்கள்.
கடக ராசி அன்பர்களே!
தாயார் வீட்டுக்குச் செல்லும் மனைவியைத் தடுக்காதீர்கள். கம்பெனியின் கணக்கு வழக்குகளை சரியாகக் காட்டினால் சிக்கலில் மாட்ட மாட்டீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் சின்ன சறுக்களை சந்திப்பீர்கள். காதலியிடம் புரியாமல் பேசி தேவையில்லாத வம்பில் மாட்டிக்கொள்வீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே!
வேலையாட்கள் பற்றாக்குறையால் தொழிலில் முதலீடு செய்ய தயங்குவீர்கள். மெட்டீரியல் இல்லாமல் கட்டிட வேலையை தள்ளிப் போடுவீர்கள். சொன்ன நேரத்திற்கு வேலையை முடிக்காமல் எலெக்ட்ரிஷீயன்கள் திணறுவீர்கள். வெளியிடப் பயணங்களால் பயன் அதிகம் அடைய மாட்டீர்கள். நிதானத்தை இழக்காமல் வேலை பார்க்க முயற்சி செய்வீர்கள்.
கன்னி ராசி அன்பர்களே!
எதிர்பாராத வகையில் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். மளமளவென்று பணவரவை அதிகரிப்பீர்கள். விறுவிறுப்பாக வியாபாரம் செய்வீர்கள். அரசு வேலையில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். திடீர் மருத்துவச் செலவு வந்து திணறி போவீர்கள்.
துலா ராசி அன்பர்களே!
பேச்சுத் திறமையால் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த நண்பர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். கையிருப்பை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த வில்லங்கங்களைத் தீர்ப்பீர்கள்.
விருச்சிக ராசி அன்பர்களே!
வேலையிடத்தில் சக ஊழியர்களின் இடையூறுகளை முறியடிப்பீர்கள். புரிந்து கொள்ளாமல் குடும்பத்தினர் பேசுவதால் மனக் காயம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்காமல் வருத்தப்படுவீர்கள். பிள்ளைகளின் பிரச்சினைக்காக கல்லூரிக்குச் செல்வீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் வர தாமதப்படுவதால் தொழிலில் பின்னடைவை சந்திப்பீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே!
எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் சகோதரிகளிடம் திட்டு வாங்கி கட்டிக் கொள்வீர்கள். . கையில் வைத்திருக்கும் பணத்தைக் கவனமாகக் கையாளத் தவறாதீர்கள். வீட்டை விட்டு வெளியேறும் போது பூட்டை இழுத்துப் பார்த்து விட்டுச் செல்ல மறக்காதீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக இருங்கள்.
மகர ராசி அன்பர்களே!
சிறிய வேலை என்றாலும் பெரிய அக்கறையோடு செய்வீர்கள். பெற்றோர்களின் பாராட்டல் உச்சி குளிர்ந்து போவீர்கள். உறவுகளைத் தேடிச் சென்று உதவுவீர்கள். வீட்டுக்காக எதிர்பார்த்த வங்கி லோன் சாங்ஷன் ஆகி துரிதமாக வேலையை தொடங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துகிறீர்கள்.
கும்பராசி அன்பர்களே!
ஆடல் பாடல் என்று ஆடம்பரங்களில் நாட்டம் கொண்டு அதிகம் செலவு செய்வீர்கள். தேவையில்லாத பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். இவனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசுவீர்கள். தொழிலில் உங்கள் வேகத்தைப் பார்த்து எதிரிகள் பொறாமைப்படுவார்கள். வேலை இடத்தில் சோர்வடையமாட்டீர்கள்.
மீனராசி அன்பர்களே!
உங்கள் மனம் புண்பட பேசுபவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள். பிள்ளைகளின் பிரச்சினையால் டென்ஷன் ஆவீர்கள். மனைவியின் பேச்சு கோபத்தைத் தூண்டி பொறுமை இழப்பீர்கள். தாயாரின் குதிகால் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்து செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.