வரலாற்றில் இன்று (05.07.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூலை 5 (July 5) கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

328 – உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது.
1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர்.
1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1807 – புவெனசு ஐரிசில் பிரித்தானியப் படையினரின் இரண்டாவது ஊடுருவலை உள்ளூர் துணை இராணுவத்தினர் தடுத்தனர்.
1809 – நெப்போலியப் போர்களின் மிகப் பெரும் சமர் பிரான்சுக்கும் ஆத்திரியப் பேரரசுக்கும் இடையில் வாக்ரம் என்ற இடத்தில் இடம்பெற்றது.
1811 – வெனிசுவேலா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1884 – செருமனி கமரூனை ஆக்கிரமித்தது.
1900 – ஆத்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் தூதரக உறவைத் துண்டித்தன.
1941 – இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: செருமனிப் படையினர் தினேப்பர் ஆற்றை அடைந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் அணியின் தாக்குதல் கப்பல்கள் சிசிலி நோக்கி சென்றன (நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு, சூலை 10, 1943).
1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியம் மீது கூர்ஸ்க் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.
1950 – சியோனிசம்: யூதர்கள் அனைவரும் இசுரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இசுரேலில் கொண்டுவரப்பட்டது.
1954 – பிபிசி தனது முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.
1962 – பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
1971 – ஐக்கிய அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.
1975 – விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஆர்தர் ஆஷ் பெற்றார்.
1975 – போர்த்துக்கல்லிடம் இருந்து கேப் வர்டி விடுதலை பெற்றது.
1977 – பாக்கித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
1980 – சுவீடனைச் சேர்ந்த டென்னிசு வீரர் பியார்ன் போர்டி தொடர்ச்சியாக 5வது தடவை விம்பிள்டன் கோப்பையை வென்று (1976–1980) சாதனை படைத்தார்.
1987 – ஈழப் போர்: விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
1992 – இயக்கச்சியில் வை-8 விமானம் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1996 – குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.
1997 – ஈழப் போர்: இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரை திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998 – செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை சப்பான் ஏவியது.
2004 – இந்தோனீசியாவில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
2009 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத் தலைநகர் உருமுச்சியில் கலவரங்கள் வெடித்தன.
2009 – ரொஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிசுத் தொடரில் ஆண்டி ரோடிக்கை வென்று 15வது பெருவெற்றித் தொடரைப் பெற்று சாதனை புரிந்தார்.
2016 – யூனோ விண்கலம் வியாழன் கோளை அடைந்து தனது 20-மாத ஆய்வை அக்கோளில் ஆரம்பித்தது.

பிறப்புகள்

1057 – அல் கசாலி, ஈரானிய மெய்யியலாளர் (இ. 1111)
1750 – அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1803)
1810 – பி. டி. பர்னம், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1891)
1853 – செசில் ரோட்சு, தென்னாப்பிரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 1902)
1857 – கிளாரா ஜெட்கின், செருமானிய மார்க்சியவாதி (இ. 1933)
1867 – ஏ. ஈ. டவுகிளாசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1962)
1888 – உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1970)
1902 – அ. கி. பரந்தாமனார், தமிழக எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், வரலாற்றாசிரியர் (இ. 1986)
1904 – எர்ணஸ்ட் மாயர், செருமானிய-அமெரிக்க உயிரியலாளர் (இ. 2005)
1918 – கே. கருணாகரன், கேரளத்தின் 7வது முதலமைச்சர் (இ. 2010)
1933 – ஜான் வி. எவான்சு, ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர்
1938 – பீலி சிவம், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2017)
1946 – பாலகுமாரன், தமிழக எழுத்தாளர்
1946 – இராம் விலாசு பாசுவான், இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (இ. 2020)
1949 – சிவசங்கர் மேனன், இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
1954 – ஜான் ரைட், நியூசிலாந்து துடுப்பாளர்
1958 – பில் வாட்டர்சன், அமெரிக்க கேலிப்பட ஓவியர், எழுத்தாளர்
1987 – அஸ்வின் ககுமனு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1826 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர். (பி. 1782)
1833 – யோசெப் நிசிபோர் நியெப்சு, பிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளர் (பி. 1765)
1898 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசையாளர் (பி. 1839)
1965 – க. பசுபதி, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (பி. 1925)
1966 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1885)
1969 – வால்ட்டர் குரோப்பியசு, செருமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1883)
1970 – கு. அழகிரிசாமி, தமிழக எழுத்தாளர் (பி. 1923)
1987 – வல்லிபுரம் வசந்தன், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி (பி. 1966)
1994 – வைக்கம் முகமது பசீர், மலையாள எழுத்தாளர் (பி. 1908)
1997 – அ. தங்கதுரை, ஈழத்து அரசியல்வாதி (பி. 1936)
2006 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (பி. 1924)
2015 – நாம்பு ஓச்சிரோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1921)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (வெனிசுவேலா, 1811)
விடுதலை நாள் (அல்சீரியா, 1962)
விடுதலை நாள் (கேப் வர்டி, 1975)
கரும்புலிகள் நாள் (தமிழீழம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!