இன்றைய ராசி பலன்கள் ( ஜூன் 27 வியாழக்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( ஜூன் 27 வியாழக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூன் 27-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று மொத்தத்தில் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களின் திடமான முயற்சி மூலம் இன்று உங்கள் பணியில் நல்ல பலன்கள் காண்பீர்கள். நீங்கள் கணிசமான தொகை சம்பாதிக்க விரும்புவீர்கள். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பெற்று மகிழ்வீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று சாதகமான பலன்கள் காண்பீர்கள். உங்கள் வாழ்வில் நன்மை தரும் மாற்றங்கள் நிகழும். நீங்கள் உங்கள் வலிமையை உணர்வீர்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்ள இயலும். உங்கள் பணிகளை முடிப்பதற்கு அதிக முயற்சி எடுப்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

மிதுன ராசி அன்பர்களே!

நீங்கள் கவலைப் படும் வகையில் சில குழப்பங்கள் எதிர் கொள்ள நேரும் என்றாலும் இன்று சராசரியை விட சற்று சிறப்பாக காணப்படும் நாள். இன்று பணிச்சுமை காணப்படும். நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று சற்று மந்தமான நாள். நீங்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். தன்னம்பிக்கை உருவாக்கிக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. பணியில் தவறுகள் நேராமல் இருக்க திட்டமிட்டு அதன்படி செயலாற்ற வேண்டும். இன்று பண இழப்பிற்கு வாய்ப்பு உள்ளது. இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக பணியிடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி வளர்ச்சி இன்று மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணிசமான தொகை சேமிப்பீர்கள். உங்கள் வங்கியிருப்பு உயரும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

நீங்கள் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். ஆனால் இன்று விரைந்து முடிவு எடுப்பீர்கள். நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள். இயலாததைக் கூட சாத்தியமாக்கும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். இன்று நீங்கள் பணியில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் பொறுப்புகளை முடிக்கும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும். இன்று அதிக செலவுகள் காணப்படும். பண வரவிற்கான வாய்ப்ப்புகள் குறைவு. உங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். பொதுவாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் செயல்களை திட்டமிட்டு மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். பணியில் வெற்றி காண்பதற்கான மன உறுதி உங்களிடம் காணப்படும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் கையிருப்பு பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று அனுகூலமான நாளாக இருக்காது. உங்கள் அணுகுமுறையில் உறுதி தேவை. இன்று பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. அதிகப் பணிகள் காணப்படும். அது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக ஆற்ற வேண்டும். இன்று நிதி வளர்ச்சி அனுகூலமாக இருக்காது. நீங்கள் ஒவ்வொரு ரூபாயையும் கவனமாக செலவு செய்ய வேண்டும்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். எல்லா செயல்களையும் எளிதாக மேற்கொள்வீர்கள். உங்கள் ஆற்றலை உணர்ந்து கொள்வீர்கள். பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். எல்லா விதத்திலும் நன்மை காணப்படும். உங்களிடம் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும். உங்கள் சேமிப்பு கூடுவதற்கான வாய்ப்பு காணப்படும். இன்று திடமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மகர ராசி அன்பர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தொடர்பாடல் திறமை மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். உங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள்.உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். சேமிப்பை சிறப்பாக பராமரிக்கும் நிலையில் இருப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று தேவையான முயற்சிகள் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற கவலைகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. நீங்கள் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. அதனை தவிர்க்க வேண்டும். நிதிநிலைமை ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

மீனராசி அன்பர்களே!

இன்று சற்று மந்தமான நாள். சவால்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். உற்சாகமாக இருப்பது நல்லது. பணியிடத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்காது. கூடுதல் சுமை காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். நீங்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...