இன்றைய ராசி பலன்கள் – 14-12-2019 சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்

பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : மகிழ்ச்சியான நாள்.

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

—————————————


ரிஷபம்

பொருள் வரவால் சேமிப்பு உயரும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். கடனால் மனவருத்தங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அந்நியர்களின் மூலம் இலாபம் உண்டாகும். தாய்மாமன் உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : சேமிப்பு உயரும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.

—————————————


மிதுனம்

கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : மேன்மையான நாள்.

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

—————————————


கடகம்

குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

புனர்பூசம் : ஆசிகள் கிடைக்கும்.

பூசம் : கவனத்துடன் இருக்கவும்.

ஆயில்யம் : மதிப்புகள் உயரும்.

—————————————


சிம்மம்

பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் ஏற்படும். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : சுபச்செலவுகள் உண்டாகும்.

பூரம் : எண்ணங்கள் மேம்படும்.

உத்திரம் : சாதகமான நாள்.

—————————————


கன்னி

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணத்திற்கான வரன்கள் சாதகமாக அமையும். சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : முயற்சிகள் கைகூடும்.

அஸ்தம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

—————————————


துலாம்

ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். தந்தைவழி சொத்துக்களால் இலாபம் உண்டாகும் . இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.

சுவாதி : இலாபம் உண்டாகும்.

விசாகம் : அனுகூலமான நாள்.

—————————————


விருச்சிகம்

புதிய நபர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் வேண்டும். சுரங்க பணிகளில் ஈடுபடுபவர்கள் பணியில் கவனமாக செயல்படவும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : மந்தத்தன்மை உண்டாகும்.

கேட்டை : மனம் மகிழ்வீர்கள்.

—————————————


தனுசு

வெளியூர் சம்பந்தமான பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

மூலம் : அனுகூலமான நாள்.

பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

—————————————


மகரம்

எண்ணிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் அளிக்க முயல்வீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். மாணவர்கள் கல்வியில் செய்யும் புதுவிதமான முயற்சிகள் நன்மை பயக்கும். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...