சமஸ்கிரதமா தமிழா? சு வெங்கடேசன்
1921 சமஸ்கிருத மாநில மாநாடு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில் முக்கிய விருந்தினராக சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பனகல் அரசர் கலந்து கொண்டார். விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.
விழாவில் பேசிய அனைவரும் சமஸ்கிரதத்தில் பேசினார்கள். குறிப்பாக பனகல் அரசர் அவர்களுக்கு சமஸ்கிருத மொழி தெரியாது என்று கேள்விப் பட்டதால், கிண்டலும் கேலியுமாக அனைவருடைய பேச்சும் இருந்தது. பனகல் அரசர் ஒன்றும் புரியாமல் அர்த்தம் புரியாதது போல், அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் அனைவரும் பேசி முடித்தார்கள் முடித்தவுடன் நிறைவாக முதலமைச்சர் பனகல் அரசர் பேசுவதற்கு அழைத்தார்கள்.
அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவார் அல்லது தமிழில் பேசுவார் என்று அவளோடு கேட்டுக்கொண்டிருக்கும் அந்த நிமிடத்தில் சமஸ்கிருதத்தில் பேச ஆரம்பித்தார். அதுவும் சுத்தமான சமஸ்கிரதம் கொஞ்சம்கூட அடுத்த மொழி கலக்காமல், இலக்கண சுத்தமாக பேசிய அந்த பேச்சை கேட்ட அத்தனை பேரும் ஸ்தம்பித்து நின்றார்கள். இவ்வளவு நேரம் பேசியது எல்லாம் அவருக்கு அர்த்தம் புரிந்திருக்கிறது. தெரியாதது போல் அமர்ந்து இருந்திருக்கிறார் என்று உணர்ந்ததும், அத்தனை பேருக்கும் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்.
மிக தெளிவாக பேசிய அந்த பேசி கேட்டு ஏதும் செய்ய முடியாமல் அமர்ந்திருந்தார்கள். விழா முடிந்தது. ஒரு சிலர் வந்து மன்னிப்புக் கோரினார்கள். மற்ற சிலர் செருக்கோடு கிளம்பி சென்றார்கள். முதலமைச்சர் பனகல் அரசர் தானும் கிளம்பினார்.
தனது இல்லத்திற்கு வருகின்ற வழியில்
“மருத்துவ படிப்பில் சமஸ்கிரதம் ஒரு பாடமாக இருக்கிறது அல்லவா?” என்று தன் உதவியாளரிடம் கேட்டார்
“ஆம் ஐயா” என்று உதவியாளர் சொல்லியிருக்கிறார்.
“மருத்துவத்துக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்” என்று பனகல் அரசர் கேட்க
” தெரியவில்லை ஐயா” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
“அப்படி என்றால் மருத்துவத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு சமஸ்கிருதம் அந்த பாடத்திட்டத்திற்கு எதற்கு ?” என்று சொல்லி விட்டு,
“வீட்டுக்கு செல்ல வேண்டாம் உடனே தலைமைச் செயலகம் செல்லலாம்! என்று அப்படியே வாகனத்தை திருப்பி தலைமை செயலகம் சென்று தலைமைச் செயலாளரை அழைத்து,
“மருத்துவ படிப்புக்கு இனி சமஸ்கிருதம் என்ற ஒரு பாடம் தேவையில்லை இன்றுமுதல் நீக்கப்படுகிறது என்று அறிவிப்பு உடனடியாக நடைமுறை படுத்துங்கள்” என்று சொன்னார்.
அடுத்த நாள் காலை தலைப்புச் செய்தியே இதுதான். அதற்கு மிகுந்த எதிர்ப்பு வந்தபோதிலும் அத்தனையும் சமாளித்து அந்த சமஸ்கிருதம் மருத்துவ படிப்பில் இருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.
அதன்பிறகு சமஸ்கிருதம் சரி தெரிந்த ஒரு பகுதி மக்கள் மட்டுமே மருத்துவராக இருந்த காலகட்டம் தாண்டி, அனைவரும் மருத்துவர் ஆகலாம் என்று தற்போது வரை அந்த நடைமுறை இருந்து வருகிறது என்பது ஒரு பெருமைக்குரிய ஒரு விஷயம் . என்றாலும் அந்த வகையில் தற்பொழுது நீட் என்ற சமஸ்கிருதம் தடைக்கல்லாய் நின்று தமிழ் மக்களுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் மருத்துவ படிப்பு கிடைக்காத அளவிற்கு வட இந்திய மக்கள் அதிகப்படியான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொள்வது மாநில சுயாட்சியை மறுக்கப்படுகிறது என்ற ஒரு தெளிவான நோக்கம் புரிந்தாலும் இதற்காக நாம் நிறைய போராட வேண்டியிருக்கிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது.
ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களுடைய சுயநலம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் மக்களுக்கு தேவையான விஷயங்களை மறந்து விடுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம் ஒரு காலகட்டத்தில் இந்தி அதிக கட்டாயப்படுத்தப்பட்டு திணிக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் சற்றே ஆசுவாசம் ஆனதும் தற்பொழுது சமஸ்கிரதம் முன்னிறுத்தப்படுகிறது சமீபத்தில் தமிழ் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான பொறுப்பாளர்களை நியமிக்காமலும் நிதி மற்றும் வசதிகள் எதுவும் செய்யமலும் சமஸ்கிருத பல்கலைக்கழகம் மசோதா என்று ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த பொழுது தமிழகத்தில் இருக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்காதபொழுது சு. வெங்கடேசன் என்னும் மதுரையை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மிகத் தைரியமாக கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் தமிழைப் பற்றிய விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.
“தமிழ் சமஸ்கிருதத்தை விட 700 வருடங்கள் முன்னணியில் இருந்து மக்கள் பேசுகின்ற மொழி. சமஸ்கிருதம் தேவமொழி என்று நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம்.
அது உங்கள் நம்பிக்கை ஆனால் அதை தாண்டி மக்கள் பேசும் மொழியாக பல நாடுகளிலும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள், என்று ஆணித்தனமாக வரலாற்று பதிவோடு எடுத்து மேற்கோள்காட்டி சிறந்த முறையில் பேசி அந்த ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் தன் கவனயீர்ப்பு கொண்டு வந்திருக்கிறார்.
அவருக்கு கைத்தடி மின்னிதழ் சார்பாக நெஞ்சார்ந்தபாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
கிட்டத்தட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தமிழகத்தில் ஒருவர் கூட இது பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
யார் இந்த சு வெங்கடேசன்? இவர் மதுரையில் இருந்து வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எழுதிய காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதினத்திற்கு 2011க்கான சாகித்திய அகாடமி விருது பெற்று.
கல்லூரி காலங்களிலேயே கவிதை எழுதியவர். நிறைய கதைகளும் கவிதைகள் எழுதியவர். மிக சிறந்த எழுத்தாளர் என்பது இங்கு முக்கியமாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது.
தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை மட்டுமல்ல உலகத்தில் நாடாளுபவர்கள் மிகச் சிறந்த விதத்தில் செயல்பட்டவர்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் எழுத்தாளர்களாக இருப்பது மிகப்பெரிய ஒரு ஆளுமைகளாக இருப்பார்கள்.
நம் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவர் இவர்களில் நிறைய பேர் எழுத்தாளர்கள்தான். ஒரு எழுத்தாளர் மட்டும்தான் சமூகத்தை மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வையுடன் பார்ப்பார் என்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களே உதாரணம். அவர் சொன்ன செய்திகள் அத்தனையும் வரலாற்றுப் பதிவு. எதுவுமே பேச்சுக்காக சொன்னது சுவைக்காக சொன்னது என்று விட்டுவிட முடியாது.
தமிழின் அடி ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட அங்கீகாரமாக மாகும் இது இப்படியே கடந்து சென்றுவிட்டால் வெறும் சம்பவம் அவ்வளவுதான் இதற்கு தமிழக மக்கள் எவ்வாறு இதை எதிர்கொள்ள போகிறார்கள் என்பதுதான் வருங்கால சரித்திரமாகும் நிச்சயமாக இந்த சரித்திரத்தை எதிர்நோக்கி மின் கைதட்டி மின்னிதழ்.
காணொளி காட்சி : Courtesy: LSTV & nba 24×7