தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை நல்ல பொழிவைத் தந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக பிரபல வானிலை கணிப்பாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். “ஆச்சரியம்… ஆச்சரியம்… வரும் டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் மிதமான மழை பெய்யவே வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது உருவாகியிருக்கும் சூழலைப் பார்த்தால் டிசம்பர் 13 இரவிலும் 14 அன்று காலையிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்த கனமழையானது கடலூர் முதல் சென்னை வரை பொழிவைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை கண்டிப்பாக பெய்யும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அடுத்தடுத்து சூழல் எப்படி மாறுகிறது என்பதை வைத்துத்தான் நாம் அதைச் சொல்ல முடியும். மிகவும் லேசான மழையாக மாறுவதற்கும், மழையே இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.இன்று டெல்டா முதல் ராமநாதபுரம் வரையுள்ள பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்,” என்று பரபரப்பான தகவலைத் தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான் .வடகிழக்குப் பருவமழைக் காலம் நிலவி வந்தாலும், தமிழக அளவில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதைத் தணிக்கும் வகையில் மழை வந்தால் நன்றாகே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.